ராஜதானி எக்ஸ்பிரஸ்.. அசால்டா 155.8 கி.மீ வேகம்.. லக்னோ-வின் யார் இந்த மயங்க் யாதவ்?

0
604
LSG

ஐபிஎல் 17வது சீசனில், 11வது போட்டியில் இன்று லக்னோ ஏகனா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தனிஒரு வீரராக, லக்னோ அணிக்கு அறிமுக போட்டியில் விளையாடிய வலதுகை வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் பஞ்சாப் அணியை வீழ்த்தி தனது லக்னோ அணியை வெல்ல வைத்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் தனது முதல் ஐபிஎல் தொடரின் பந்தை 147 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய அவர், குறைந்தபட்ச வேகமாக வீசியது 140 கிலோ மீட்டர் வேகம். 200 ரன்களை துரத்திக் கொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பில்லாமல் 98 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் பந்து வீச உள்ளே வந்த மயங்க் யாதவ் ஜானி பேர்ஸ்டோ ஜிதேஷ் சர்மா மற்றும் பிரப்ஸிம்ரன் சிங் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, மொத்தமாக ஆட்டத்தை லக்னோ அணியின் பக்கம் திருப்பி கொடுத்து வெல்ல வைத்தார். இந்த போட்டியில் மொத்தம் நான்கு ஓவர்கள் வீசியவர் 27 ரன்கள் மட்டும் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

21 வயதாகும் வலதுகை அதிவேக பந்துவீச்சாளரான இவர் டெல்லி மாநில அணிக்காக விளையாடுகிறார். இவர் உள்நாட்டில் 50 ஓவர் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்த பொழுதே, இவரது வேகத்தின் காரணமாக 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் பயிற்சி முகாமின் போதே காயம் அடைந்த இவர் துரதிஷ்டவசமாக விளையாட முடியாமல் போனது.

இந்த ஆண்டு நடைபெற்ற தியோதர் ஒருநாள் கிரிக்கெட் டிராபியில் வடக்கு மண்டல அணிக்காக விளையாடி அதிக விக்கெட் கைப்பற்றியவராக வந்தார். மேலும் இந்தத் தொடரில் ராகுல் திரிபாதிக்கு மிடில் ஸ்டெம்பை பறக்கவிட்டு இவர் எடுத்த விக்கெட் எல்லோரது கவனத்தையும் கவர்ந்த ஒன்றாக அமைந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு உடல் தகுதியுடன் திரும்பி வந்து தனது வேகத்தால் அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : பேர்ஸ்டோ ஜிதேஷ்கிட்ட அந்த பையன பத்தி சொன்னேன்.. வேகத்தில மிரட்டிட்டான் – ஷிகர் தவான் பேட்டி

இவர் ஒரே ஒரு முதல் தர போட்டியில் மட்டுமே விளையாடி 2 விக்கெட்டுகளும், 17 50ஓவர் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளும், பத்து டி20 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் இவர் ஒரு ஓவருக்கு 6.44 என்கின்ற அளவில் மட்டுமே சிக்கனமாக ரன்கள் தரக்கூடியவராக இருப்பதும் சிறப்பாக இருக்கிறது. இவர் டெல்லியை சேர்ந்த அதிவேக பந்துவீச்சாளர் என்பதால் ராஜதானி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கிறார்கள். மேலும் அதிவேகமாக வீசினாலும் பந்து வீச்சின் துல்லியம் குறையாமல் இருப்பதால், இந்திய கிரிக்கெட்டில் இவருக்கு பெரிய எதிர்காலம் இருப்பதாக தற்பொழுதே எல்லோரும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்!