கிரிக்கெட் உலகில் யாருக்கும் நடக்காதது.. ஜெய்ஸ்வாலுக்கு நடந்த வினோத சம்பவம்.. ஒரே சின்ன ஆறுதல்

0
181
Jaiswal

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்திருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி அபாரமாக நான்குக்கு ஒன்று என கைப்பற்றி அசத்தியிருக்கிறது.

பெரிய வீரர்கள் பலர் இல்லாமல் இந்த தொடரை இளம் வீரர்களைக் கொண்டு வழிநடத்த வேண்டிய கட்டாயம் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இருந்தது. மொத்தம் இந்த தொடரில் 5 அறிமுக வீரர்கள் வாய்ப்பு பெற்றார்கள். இதில் ரஜத் பட்டிதார் தவிர அனைவருமே சிறப்பாக செயல்பட்டு இருந்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய அணியின் இளம் துவக்க இடதுகை ஆட்டக்காரராக இருக்கும் ஜெய்ஸ்வால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகச் சிறப்பாக விளையாடி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். இவருடைய சிறப்பான ஆட்டத்தின் காரணமாக ரோகித் சர்மா இளம் அணியை வைத்து தொடரை வெல்வதற்கு வசதியாக அமைந்தது.

நடந்து முடிந்த இந்த தொடரில் ஜெயஸ்வால் மொத்தம் இரண்டு இரட்டை சதங்கள், மூன்று அரை சதங்கள் என, 712 ரன்களை 89 ரன் ஆவரேஜில் அடித்து மிரட்டி இருக்கிறார். மேலும் இதில் மட்டும் ஒன்பது இன்னிங்ஸ்களில் 26 சிக்ஸர்கள் நொறுக்கி இருக்கிறார். இந்த அதிரடியான ஆட்டம் இந்திய அணி தொடரை கைப்பற்றுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

எனவே இந்த தொடரின் நாயகனாக தொடர் நாயகன் விருது ஜெய்ஸ்வாலுக்கு அறிவிக்கப்பட்டது. முதல்முறையாக சொந்த மண்ணில் இந்தியாவில் விளையாடிய டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருது பெற்று பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் இதில் ஒரு சுவாரசிய வினோத சம்பவம் நடந்திருக்கிறது. இரண்டு முறை இரட்டை சதம் அடித்து இருந்தாலும், நான்காவது போட்டியில் முக்கியமான நேரத்தில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 100 ரன்கள் மேல் குவித்து இருந்தாலும், ஒரு போட்டியில் கூட இவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்கவில்லை. இவரைத் தாண்டி யாராவது சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்று விட்டார்கள்.

இதையும் படிங்க :

மும்பை இந்தியன்ஸ் ஜூனியர் மலிங்கா துஷாரா ஹாட்ரிக்.. பங்களாதேஷை
இலங்கை அணி சுருட்டியது

இப்படி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு டெஸ்ட் தொடரில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்தும், ஒரு ஆட்டநாயகன் விருது கூட பெறாமல், மொத்தமாக தொடர் நாயகன் விருது மட்டுமே பெற்ற வீரர், உலக கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வாலாக இருக்க மட்டுமே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்தியா இங்கிலாந்து தொடரில் இந்த வினோத சம்பவம் பலராலும் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாததாக அமைந்திருக்கிறது.