மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை அந்த அணியின் கேப்டனாக நியமித்ததில் இருந்தே மும்பை அணியை சுற்றியும், ரோகித் சர்மாவை சுற்றியும் பல்வேறு சர்ச்சைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் ரோகித் சர்மா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து தற்போது அந்த வீடியோவை கேகேஆர் நிர்வாகம் டெலிட் செய்துள்ளது. அதில் ரோகித் சர்மா மும்பை அணி மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும் குறிப்பிடத்தக்கது.
இந்த சீசன் துவங்கப்பட்டதில் இருந்தே மும்பை அணியை சுற்றி பல்வேறு சர்ச்சைகளும், பிரச்சனைகளும் வலம் வந்து கொண்டிருந்தன. குஜராத் அணியில் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி வாங்கி ஏற்கனவே கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருந்தா ரோகித் சர்மாவை நீக்கி விட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.
இதற்கு காரணம் கடந்த மூன்று ஆண்டுகளாக மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றும், ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் திருப்தி இல்லை என்ற காரணத்தினால் இந்த முடிவை எடுத்துள்ளதாக மும்பை அணி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய கேப்டன் மூலம் மும்பை அணி வெற்றிகளை பெறும் என்று நம்பிய நிலையில் நிலைமை அதற்கு நேர் மாறாக நடந்தது.
மும்பை அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் நான்கு போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று, எட்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில் முதல் அணியாக தற்போது பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி இருக்கிறது. மேலும் மும்பை அணி எந்த மைதானத்தில் சென்று விளையாடினாலும் அங்கு ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக மும்பை அணி ரசிகர்களும் ரோகித் சர்மாவின் ரசிகர்களும் கூச்சலிட்டு வந்தனர்.
இது எல்லாம் ஒரு புறம் இருக்க ரோகித் சர்மாவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்பது போல் தெரிகிறது. இதுகுறித்து மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக ரோஹித் சர்மா மற்றும் கேகேஆர் அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ரோஹித் சர்மா “எல்லாம் ஒவ்வொன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. மும்பை நிர்வாகம் எடுக்கும் முடிவை பொருத்தது. அதைப் பற்றி நான் பெரிதாக கவலைப்படவில்லை.
இதையும் படிங்க: பாதியில் கிளம்பி.. பங்களாதேஷில் அசத்தும் முஸ்தபிசுர் ரஹ்மான்.. சிஎஸ்கே ரசிகர்கள் வருத்தம்
சூழ்நிலை எப்படி இருந்தாலும் அதுதான் என் வீடு. இது நான் கட்டிய கோவில். ஆனால் எப்படியும் இதுவே என் கடைசி” என்று கூறி இருக்கிறார். இந்த உரையாடல் சர்ச்சையானதைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் சமூக வலைதளங்களில் இருந்த அந்த வீடியோவை நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Clear audio of Rohit Sharma and Abhishek Nayar's conversation, he didn't said that it's his last IPL.
— Aryan 🇮🇳 (@Iconic_Hitman) May 10, 2024
Please don't make any conclusions on half said words.🙏pic.twitter.com/9lbtZRQvQB