நடப்பு ஐபிஎல் தொடரில் தற்பொழுது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மாவை நீக்கி புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்தது பெரிய சச்சரவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தற்பொழுது இது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பேசியிருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரையில் ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவுக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. மேலும் கடந்த ஆண்டு பும்ரா இல்லாத நிலையில் சுமாரான ஒரு பவுலிங் யூனிட் வைத்து அணியை பிளே ஆப் சுற்றுக்கு அவர் அழைத்துச் சென்றிருந்தார்.
ஆனால் தற்போது அவரை கேப்டன் பொறுப்பில் நீக்கி விட்டு கொண்டு வரப்பட்ட ஹர்திக் பாண்டியாவோ பும்ரா முதல் கொண்டு நல்ல பவுலிங் யூனிட் மற்றும் பேட்டிங் யூனிட் இருந்தும் கூட புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் அணியிருக்கிறது. அந்த அளவிற்கு அணைக்கு குழப்பங்களும் ஒற்றுமையின்மையும் நிலவுகிறது.
ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தார்கள். மேலும் உடன் விளையாடும் சில சீனியர் வீரர்களுக்கும் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டதில் உடன்பாடு இல்லை. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா மீதான எதிர்ப்பு ரசிகர்களிடையே கொஞ்சம் குறைய ஆரம்பித்துவிட்டது.
இது குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கூறும் பொழுது ” இந்த ஐபிஎல் தொடரில் நான் ரோகித் சர்மாவிடமிருந்து ஒரு முக்கியமான விஷயத்தை பார்ப்பதற்காக மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன். அதே சமயத்தில் ரசிகர்களிடம் ஹர்திக் பாண்டியாவுக்கு இருந்த கடுமையான எதிர்ப்பு, டி20 உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து அப்படியே மாறி இருக்கிறது.
இதையும் படிங்க : இந்த ஐபிஎல் கில்லுக்கு சரியா போகல.. அதுக்கு முக்கியமான காரணம் இதுதான் – கிரேம் ஸ்மித் பேட்டி
ஆனால் எட்டு போட்டிகளுக்கு முன்னால் ரசிகர்களின் எதிர்ப்பின் காரணமாக ஹர்திக் பாண்டியா கோபமடைந்திருந்தார். அதனால் ரோகித் சர்மா வெளியே வந்து ரசிகர்களிடம் பேசுவார் என நான் நினைத்தேன். “இது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு திட்டம் ஆகும், நான் ஹர்திக் பாண்டியாவுக்கு முழு ஆதரவாக இருக்கிறேன்” என்று அவர் கூறியிருந்தால் விஷயங்கள் எப்படி மாறியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்” என்று கூறி இருக்கிறார்.