ஸ்ரேயாஸ் ஐயர் இசான் கிஷானுக்கு அடுத்த சம்பவம்.. பிசிசிஐ காட்டும் தொடர் அதிரடி.. எதிர்காலம் என்னவாகும்?

0
345
Ishan

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிஷான் இருவரும் சம்பள பட்டியலில் இடம்பெறுவதற்கான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றாலும் கூட, அவர்களுக்கு சம்பள பட்டியலில் இடம் தரப்படாது எனத் தெளிவாக கூறப்பட்டு விட்டது.

மேலும் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரல் ஆகியோருக்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடியதும் உடனே சம்பள பட்டியலில் சி கிரேடில் இடம் தரப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறுவார்கள்.

- Advertisement -

இங்கு பணத்தைவிட பெரிய விஷயம் என்னவென்றால், இந்திய அணியின் சம்பள பட்டியலில் வீரராக இருப்பது தான் முக்கியமானது. இந்திய அணியின் நிரந்தர வாய்ப்பில் ஒரு வீரர் இருக்கிறார் என்பதை அது சுட்டிக்காட்டுகிறது. எனவே இந்த இரண்டு இளம் வீரர்களுக்கும் அதிர்ஷ்டம் அடிக்க இருக்கிறது.

அதே சமயத்தில் ஏற்கனவே பி கிரேடில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், சி கிரேடில் இருந்த இஷான் கிஷான் இருவரையும் சம்பள பட்டியலில் இருந்து வெளியேற்றியது மட்டும் இல்லாமல், சம்பள பட்டியலில் இடம் பிடிப்பதற்கான போட்டிகளில் பங்கேற்றாலும் கூட, அவர்களுக்கு போட்டிக்கான கட்டணம் மட்டுமே கொடுக்கப்படும் என்று பிசிசிஐ கூறியிருக்கிறது.

இதன் மூலம் மிகத் தெளிவாக தெரிய வருவது பிசிசிஐ அவர்களை இந்திய அணியின் நிரந்தர வாய்ப்பை பெறும் வீரர்களாக கொண்டுவர விரும்பவில்லை என்பதுதான். மீண்டும் இவர்கள் எப்போது அணிக்குள் வருவார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது.

- Advertisement -

இதன் காரணமாக வருகின்ற டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான தேர்வில் இவர்களது இருவரது பெயரும் பரிசு இடையில் எடுத்துக் கொள்ளப்படாது எனச் செய்திகள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க : பிசிசிஐ ஊதிய ஒப்பந்தம்.. சம்பள உயர்வு பெற்ற 4 இந்திய வீரர்கள்.. எவ்வளவு தெரியுமா.?

வளர வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில், இந்திய அணி போன்ற மிகப்பெரிய அணியில் கிடைத்த வாய்ப்பை இரண்டு இளம் வீரர்களுமே தங்களுடைய அலட்சியத்தால் இழந்திருக்கிறார்கள். இவர்கள் எதிர்காலம் குறித்து ரவி சாஸ்திரி உட்பட மூத்த வீரர்கள் கவலை தெரிவித்து அதே நேரத்தில் நம்பிக்கையாக இருக்கும் படி கூறி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.