எங்க கிட்ட இருந்தது ஒரே திட்டம்தான்.. ஹைதராபாத் அணிய என்ன செய்யனும்னு எங்களுக்கு தெரியும் – துஷார் தேஷ்பாண்டே பேட்டி

0
2150
Tushar

இன்று ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிஎஸ்கே சாதனை படைத்தது. இந்த வெற்றியில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளர் துஷார், தேஷ் பாண்டேவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. போட்டியின் முடிவில் பந்துவீச்சு திட்டங்கள் குறித்து அவர் பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் ருதுராஜ் டாஸ் இழந்து முதலில் சிஎஸ்கே அணியை முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு இந்த போட்டியிலும் கேப்டன் ஒரு ருத்ரராஜ் சிறப்பாக விளையாடிய 54 பந்துகளில் 98 ரன்கள் குவித்தார். சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளர் தேஷ் பாண்டே வீழ்த்தினார். அவரது பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் மற்றும் அன்மோல்பிரீத் சிங் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினார்கள். இதற்கடுத்து இன்னொரு அபாயகரமான வீரர் அபிஷேக் சர்மாவையும் வெளியேற்றினார்.

கடைசிக் கட்டத்தில் மீண்டும் பந்துவீச்சுக்கு வந்த துஷார் தேஷ்பாண்டே ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விக்கெட்டையும் கைப்பற்றினார். இன்று மொத்தம் மூன்று ஓவர்கள் மட்டும் பந்துவீசி 27 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டை பற்றி, சிஎஸ்கே அணிக்கு முக்கியமான ஆட்டத்தில் வெற்றியை தேடித் தந்திருக்கிறார்.

வெற்றிக்குப் பின் பேசிய துஷார் தேஷ்பாண்டே “நாங்கள் பந்து வீசும் பொழுது, பவர் பிளேவில் ஆக்ரோஷமாக விளையாடும் ஹைதராபாத் அணிக்கு எதிராக, பொறுமையாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய ஒரே திட்டமாக இருந்தது. இன்றைய போட்டியில் எங்களுடைய இந்த திட்டம் எங்களுக்கு நல்ல பலன் தந்தது. பவர் பிளேவில் குறிப்பிட்ட அந்த லென்த்தை தொடர்ந்து வீசுவது முக்கியம். நீங்கள் அடிபட்டாலுமே அந்த லென்த்தை வீச வேண்டும். இதன் மூலம் பேட்ஸ்மேன்களுக்கு நான் பந்துவீச்சில் சவால் கொடுத்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க : தப்பா போன விஷயத்தால வெற்றி கிடைச்சிருக்கு.. நான் அந்த டைம் மகிழ்ச்சியா இல்ல அதான் உண்மை – ருதுராஜ் பேட்டி

இப்படியான திட்டங்கள் இன்று எனக்கு நன்றாக வேலை செய்தது. மேலும் மைதானம் ஈரமாக இருந்தது. முதல் இரண்டு பந்துகளுக்கு மட்டுமே ஸ்விங் கிடைத்தது. பின்பு அது நின்றுவிட்டது. ஆனால் ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் நின்று வந்தது. இந்த கண்டிஷன்களை நாங்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டோம் என்று நினைக்கிறேன். இன்று எங்களுடைய திட்டத்தில் முக்கியமானது, அவர்கள் அடித்து விளையாடினாலும், நாங்கள் எங்களுடைய திட்டத்தை விட்டு விலகாமல் இருக்க வேண்டும் என்பதுதான்” என்று கூறியிருக்கிறார்.