பிசிசிஐ ஊதிய ஒப்பந்தம்.. சம்பள உயர்வு பெற்ற 4 இந்திய வீரர்கள்.. எவ்வளவு தெரியுமா.?

0
1232

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2023 -2024 இன் படி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தங்களை அறிவித்துள்ளது. இதில் விராட் கோலி, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஏ ப்ளஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். ஏ பிளஸ் பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு வருடாந்திர ஒப்பந்தத்தின் படி ஏழு கோடி ஊதியமாக நிர்ணயிக்கப்படும்.

ஹர்திக் பாண்டியா மற்றும் முகமது சமி ஆகியோர் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நிலையில், கிரேட் சி பிரிவில் கூடுதலாக 15 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். சமீபத்தில் இந்திய அணியில் அறிமுகமான ரிங்கு சிங் மற்றும் சிவம்தூபெ ஆகிய திறமையான வீரர்கள் அதில் இடம்பெற்றுள்ளனர். மேலும் நான்கு இந்திய வீரர்கள் கிரேடு பி பிரிவிலிருந்து ஏ பிரிவிலும், கிரேடு சி பிரிவில் இருந்து பி பிரிவியிலும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அந்த நான்கு வீரர்களைப் பற்றி கட்டுரையில் காண்போம்.

- Advertisement -

1.முகமது சிராஜ்

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக தற்போது விளங்கி வரும் முகமது சிராஜ் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பைத் தொடர்களில் சிறப்பான பங்களிப்பினை இந்திய அணிக்கு வழங்கியதன் மூலம் ஒரு நாள் தொடர் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தார். கடந்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் .

மேலும் அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் 60 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவரது பந்துவீச்சு தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை கிரேடு பி பிரிவிலிருந்து ஏ பிரிவிற்கு பதவி உயர்வு பெற வழி வகுத்தது. பி பிரிவில் மூன்று கோடி சம்பாதித்து வந்த முகமது சிராஜ் ஏ பிரிவில் தற்போது 5 கோடி என பதவி உயர்வு பெறுகிறார்.

- Advertisement -

2.கே எல் ராகுல்

இந்திய அணியின் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பைத் தொடர்களில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இந்திய அணிக்காக தற்போது ஐந்தாவது இடத்தில் களமிறங்கி விளையாடி வரும் கேஎல் ராகுல் பேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார்.

2023ஆம் ஆண்டில் 57 பேட்டிங் சராசரியுடன், 1203 ரன்களை குவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 160 ரன்களும், டெஸ்டில் 143 ரன்களையும் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒரு தொடரில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் கிரிக்கெட் வாரியம் அவரை கிரேட் பி பிரிவிலிருந்து (3 கோடி) ஏ பிரிவிற்கு (5 கோடி) உயர்த்தி உள்ளது.

3.சுப்மான் கில்

இந்திய அணியின் வளரும் நம்பிக்கை நட்சத்திரமான கில் கடந்த வருடம் 7 சதம் உட்பட 2154 ரன்கள் குவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 1584 ரன்களும், டெஸ்ட் போட்டியில் 258 ரன்களும், டி20 போட்டிகளில் 312 ரன்களும் கடந்த வருடம் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் மற்றும் டி20 போட்டிகளில் சதம் அடித்து வரலாறு படைத்துள்ளார்.

இவரின் சிறந்த பேட்டிங் திறமையை அங்கீகரித்து கடந்த வருடம் இவருக்கு மதிப்பு மிக்க பாலி விருது வழங்கப்பட்டது. நல்ல சாதனைகளை படைத்து வரும் கில்லிற்கு கிரேடு பி பிரிவில் (3 கோடி) இருந்து ஏ பிரிவிற்கு (5 கோடி) பதவி உயர்வு கிடைத்துள்ளது.

4.குல்தீப் யாதவ்

இந்திய அணியின் துருப்புச் சீட்டு சுழற் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் சுழற் பந்து வீச்சில் தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார். அணிக்குத் தேவையான முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற பெரும் அளவில் உதவி உள்ளார்.

2023ஆம் ஆண்டில் ஒரு நாள் போட்டிகளில் 49 விக்கெட்களும், டி20 போட்டிகளில் 14 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இதனால் தற்போது கிரேடு சி பிரிவில் இருந்து பி பிரிவிற்கு பதவி உயர்வு அடைந்துள்ளார். சி பிரிவில் ஒரு கோடி ஊதியம் பெற்று வந்த குல்தீப் யாதவ் பி பிரிவில் மூன்று கோடியாக ஊதிய ஒப்பந்தம் பெறுகிறார்.