சேப்பாக்கத்தில் செம சம்பவம்.. மைதானத்தை யூஸ் பண்ணி சிஎஸ்கே போட்ட 3 மாஸ்டர் பிளான்.. வென்றது எப்படி?

0
3203
CSK

இன்று சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கம் தங்கள் சொந்த மைதானத்தில், மிகவும் பலம் வாய்ந்த பேட்டிங் யூனிட் கொண்ட ஹைதராபாத் அணியை 134 ரன்கள் சுருட்டி அபார வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றிக்கு சிஎஸ்கே சில புத்திசாலித்தனமான திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தி வெற்றி பெற்று இருக்கிறது.

தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் 10 ஓவர்கள் முடிந்தாலே பனிப்பொழிவு வந்துவிடுகிறது. எனவே டாஸ் வெல்லும் அணிகள் நேரடியாக பந்துவீச்சை தேர்வு செய்வதையே விரும்புகிறார்கள். இந்த நிலையில் கடந்த இரண்டு போட்டிகளாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் டாஸ் தோற்றுவிட்டார்.

- Advertisement -

மேலும் கடந்த போட்டியில் ருதுராஜ் லக்னோ அணிக்கு எதிராக சதம் அடித்த போதிலும், சிஎஸ்கே அணி 200 ரன்களுக்கு மேல் குவித்த போதிலும், லக்னோ அணியின் ஸ்டோய்னிஸ் இடம் சிக்கி தோல்வி அடைந்தது. ஆனால் இன்று முதலில் பேட்டிங் செய்து அதேபோல் 200 ரன்கள் அடித்து, இரண்டாம் பகுதியில் பெரிய அளவில் பனிப்பொழிவு இருந்த போதிலும் கூட, சிஎஸ்கே சில திட்டங்களால் வெற்றி பெற்று இருக்கிறது.

இன்றைய போட்டிக்கான ஆடுகளம் அமைந்த விதத்தில், மைதானத்தில் ஒரு பக்கம் பெரியதாகவும் ஒரு பக்கம் சிறியதாகவும் இருந்தது. இதை பவர் பிளேவில் பந்து வீசிய தீபக் சகர் மற்றும் துஷார் தேஷ் பாண்டே இருவரும் சரியாக பயன்படுத்தினார்கள். இருவருமே தாங்கள் பந்து வீசும் பகுதியில், மைதானத்தின் எந்த பக்கம் பெரியதாக இருக்கிறதோ அந்த பகுதியில் பந்து வீசினார்கள்.

குறிப்பாக துஷார் தேஷ்பாண்டே பந்து வீசும் பொழுது இடதுகை பேட்ஸ்மேன்களான ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மாவுக்கு ஆஃப் சைட் பெரியதாக இருந்தது. எனவே அந்தப் பக்கத்தை குறி வைத்து பந்தை துஷார் தேஷ்பாண்டே வெளியில் வீசி, டீப் பாய்ண்ட் திசையில் டேரில் மிட்சல் கேட்ச் மூலம் இருவரையும் வெளியே அனுப்பினார். இவர்கள் இருவரையும் இந்த திட்டத்தில் வெளியே அனுப்பியது தான் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : எங்க கிட்ட இருந்தது ஒரே திட்டம்தான்.. ஹைதராபாத் அணிய என்ன செய்யனும்னு எங்களுக்கு தெரியும் – துஷார் தேஷ்பாண்டே பேட்டி

இதற்கு அடுத்து பனிப்பொழிவு இருப்பதால் பந்தின் தையலை பிடித்து ஸ்கிராம்பெல் சீமில் பந்து வீசினார்கள். இதனால் பனிப்பொழிவின் காரணமாக தையலை பிடித்து வீசும் பொழுது பந்து நழுவாமல் நல்ல கிரிப் கிடைக்கும். மேலும் வீச வேண்டிய இடத்தில் துல்லியமாகப் பந்தை வீச முடியும். ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் ஒட்டி வர அதை பயன்படுத்தி சிறப்பான லைன் அண்ட் லென்த்தை தொடர்ந்து பின்பற்றினார்கள். இந்த புத்திசாலித்தனமான செயல்பாடு இன்று சிஎஸ்கே அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது