CSK vs RCB போட்டியில்.. பிளே ஆப் செல்ல இரு அணிகளும் என்ன செய்ய வேண்டும்.. வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?

0
532
IPL2024

நேற்று ஐபிஎல் தொடரில் நடைபெற்ற இரண்டு போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியும், டெல்லிக்கு எதிராக ஆர்சிபி அணியும் வெற்றி பெற்றனர். மேலும் இந்த இரண்டு அணிகளும் தங்களின் கடைசி போட்டியில் மோதிக்கொள்ள இருக்கின்றன. அதே சமயத்தில் இரண்டு அணிகளுமே ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புகள் கொண்ட அணிகளாக இருக்கின்றன. எனவே இவர்களது மோதலில் என்ன நடந்தால், இவர்களில் ஒருவர் பிளே ஆப் சுற்றுக்கு செல்வார்கள் என்று பார்க்கலாம்.

இந்த இரண்டு அணிகளும் வருகின்ற மே 18ஆம் தேதி மோதிக் கொள்ள இருக்கின்றன. தற்போது சிஎஸ்கே அணி 13 போட்டிகளில் 7 வெற்றிகள் உடன் 14 புள்ளிகள் எடுத்து, +0.528 ரன் ரேட் உடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி 13 போட்டியில் 6 வெற்றிகள் உடன் 12 புள்ளிகள் எடுத்து, +0.387 ரன் ரேட் உடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்த இரண்டு அணிகளும் மோதும் பொழுது ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் எடுத்து சமநிலை அடையும். அப்பொழுது சிஎஸ்கே அணியை விட ஆர்சிபி அணி ரன் ரேட்டில் முன்னணியில் இருக்க வேண்டும். ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால், சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். இது ஆர்சிபி அணி 201 ரன்கள் சேஸ் செய்தால் 11 பந்துகள் மீதம் வைத்து வெல்ல வேண்டும். அப்போது சிஎஸ்கே அணிய விட ரன் ரேட்டில் ஆர்சிபி முன்னால் இருக்கும்.

மேலும் rcb அணி 14 புள்ளிகள் உடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால், லக்னோ அணி தனது கடைசி இரண்டு போட்டியில் ஒரு போட்டியை தோற்க வேண்டும். இல்லையென்றால் ஹைதராபாத் அணி தனக்கு இருக்கும் இரண்டு போட்டிகளில் இரண்டையும் தோற்க வேண்டும்.

இதே சிஎஸ்கே அணி ஆர்சிபி அணியை வெற்றி பெற்றால் போதும். அந்த அணி புள்ளி பட்டியலில் 16 புள்ளிகள் எடுத்து குறைந்தபட்சம் நான்காவது இடத்தையாவது பிடித்து ப்ளே ஆப் சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றுவிடும்.

- Advertisement -

இதையும் படிங்க : 78 பந்து 140 ரன்.. பாகிஸ்தான் அணியை வரலாற்று தோல்வியில் காப்பாற்றிய ரிஸ்வான் ஜமான்.. அயர்லாந்து பரிதாபம்

ஒருவேளை ஆர்சிபி அணியிடம் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து, அதே சமயத்தில் லக்னோ அணி டெல்லி மற்றும் மும்பை அணிகளை வென்று, அதேபோல ஹைதராபாத் அணி குஜராத் அல்லது பஞ்சாப் அணியை என்றாலோ, இந்த இரண்டு அணிகளும், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் உடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணி பரிதாபமாக தகுதியை இழக்கும்.