பாகிஸ்தான் அணிக்கு ஜெயிக்கிற தகுதியே கிடையாது.. திரும்ப 1999 வந்திருக்கு – சோயப் அக்தர் வேதனை

0
788
Akthar

நேற்று இரவு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குள் மீண்டும் புயலை கிளப்பி இருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு பவர் பிளேவில் மூன்று விக்கெட்டுகள் விழுந்தது. மேலும் அந்த அணியால் 30 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய அந்த அணி 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் அசாம் மிகப் பொறுமையாக விளையாடிய 43 பந்தில் 44 ரன்கள் மட்டும் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அடுத்து சுலபமாக வெல்ல வேண்டிய இடத்தில் இருந்து அமெரிக்க அணி போட்டியை டிரா செய்தது. மேலும் தொடர்ந்து சூப்பர் ஓவரில் விளையாடிய அமெரிக்க அணி 19 ரன்கள் எடுத்து, பாகிஸ்தான் அணியை 13 ரன்னில் கட்டுப்படுத்தி அற்புதமான வெற்றியைப் பெற்றது.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் பேட்டிங் எப்படி இருந்தாலும் மிகச்சிறந்த பந்துவீச்சு வரிசையை வைத்திருந்தது. அப்படி இருந்தும் அவர்களால் பவர் பிளேவில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது. மேலும் மிடில் ஓவர்களில் அவர்களால் அமெரிக்க பேட்டிங் யூனிட் மீது எந்தவித அழுத்தத்தையும் உருவாக்க முடியவில்லை.

- Advertisement -

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறும் பொழுது “அமெரிக்கா அணியிடம் தோற்றது மிகவும் ஏமாற்றமான ஒரு தோல்வியாக அமைந்திருக்கிறது. 1999ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்காக நாங்கள் தோற்ற வரலாறு மீண்டும் திரும்பி இருக்கிறது. உண்மை என்னவென்றால் துரதிஷ்டவசமாக பாகிஸ்தானை அணி வெற்றி பெறுவதற்கு தகுதியற்ற அணி. காரணம் அமெரிக்கா சிறப்பாக விளையாடி கட்டளையிடும் இடத்தில் இருந்தார்கள்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணி அல்ல.. யார் வந்தாலும் எங்கள் இலக்கு இதுதான்.. வேட்டையாட காத்திருக்கிறோம்.. ஹர்திக் பாண்டியா நம்பிக்கை

முகமது அமீர் போட்டியை காப்பாற்றினார். அவரும் ஷாகினும் சேர்ந்து மொத்தம் 37 ஓவர்களில் இருந்த ஆட்டத்தை பாகிஸ்தான் பக்கம் அப்படியே திருப்பினார்கள். துரதிஷ்டவசமாக எங்களால் அதை எங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள முடியவில்லை. இது மனக்காயத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -