இதான்யா வேணும் அமெரிக்கா.. பாகிஸ்தானுக்கு அற்புதமான வேலையை பார்த்துட்டிங்க – கேன் வில்லியம்சன் பாராட்டு

0
243
Williamson

நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி நேற்று தனது முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் அமெரிக்க அணி மிகச் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணியை வென்றது. இந்தப் போட்டி குறித்து நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் பாராட்டுக்கள் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க அணி நடப்பு டி20 உலக கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சேர்ந்து நடத்துகிறது. தொடரை நடத்துகின்ற காரணத்தினால் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுகின்ற வாய்ப்பு நேரடியாக கிடைத்தது.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக பங்களாதேஷ் அணி அமெரிக்க அணிக்கு எதிராக அமெரிக்காவில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடியது. இந்தத் தொடரிலும் அமெரிக்க அணி மிகச் சிறப்பாக விளையாடி முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரையும் கைப்பற்றி அசத்தியிருந்தது.

இந்த நிலையில் தனது முதல் போட்டியில் கனடா அணிக்கு எதிராக 190 ரன்கள் மேல் சேஸ் செய்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் என பல நாடுகளுக்கு கிரிக்கெட் விளையாடிய வீரர்கள் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக 159 ரன்கள் துரத்தி டிரா செய்து, சூப்பர் ஓவரில் 18 ரன்கள் எடுத்து, பாகிஸ்தான் அணியை ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமெரிக்க அணி வெற்றி பெற்றது. மிகக்குறிப்பாக பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும் முதல் போட்டியிலேயே அவர்களை அமெரிக்க அணி வென்று இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கு ஜெயிக்கிற தகுதியே கிடையாது.. திரும்ப 1999 வந்திருக்கு – சோயப் அக்தர் வேதனை

இது குறித்து நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் பேசும்பொழுது “கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இது மிகவும் சிறந்த ஒன்று. இது ஒரு அற்புதமான கிரிக்கெட். இந்த டி20 உலக கோப்பை தொடரில் எது வேண்டுமானாலும் யாருக்கும் நடக்கலாம். இதுதான் இந்த விளையாட்டின் அழகு” என்று கூறியிருக்கிறார்.