78 பந்து 140 ரன்.. பாகிஸ்தான் அணியை வரலாற்று தோல்வியில் காப்பாற்றிய ரிஸ்வான் ஜமான்.. அயர்லாந்து பரிதாபம்

0
359
Pakistan

பாகிஸ்தான் அணி தற்போது அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் அயர்லாந்து அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் அபாரமான முறையில் செயல்பட்டு வெற்றி பெற்று இருக்கிறது.

இரண்டாவது போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அயர்லாந்து துவக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்டை ஷாகின் ஷா அப்ரிடி கைப்பற்றினார். இதற்கடுத்து பேட்டிங்கில் மூன்றாவதாக வந்த லார்கன் டக்கர் 34 பந்துகளில் 51 ரன்கள், ஹாரி டெக்டர் 28 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து கடைசி கட்டத்தில் கர்ட்டிஸ் காம்பர் 13 பந்தில் 22 ரன்கள், ட்க்ரோல் 8 பந்தில் 15 ரன்கள், டெலனி 10 பந்தில் 28 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் அயர்லாந்து அணி அபாரமாக பேட்டிங்கில் செயல்பட்டு, 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. ஷாகின் ஷா அப்ரிடி மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் சையும் அயூப் 3 பந்தில் 6 ரன்கள், கேப்டன் பாபர் அசாம் ரன் ஏதும் இல்லாமல் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு பெரிய நெருக்கடி உண்டானது. இந்த போட்டியில் தோற்றால் அயர்லாந்து அணிக்கு எதிராக முதல் முறையாக ஒரு தொடரை இழக்கும் வரலாற்று தோல்வி வரும் என்கின்ற இக்கட்டான நிலையில் பாகிஸ்தான அணி சிக்கியது.

இப்படியான நிலையில் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மற்றும் நான்காவது இடத்தில் வந்த பகார் ஜமான் இருவரும் சேர்ந்து ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை காட்டி விளையாடினார்கள். பின்பு இந்த ஜோடி அதிரடியில் மிரட்ட ஆரம்பித்தது. சிறப்பாக விளையாடிய இருவருமே அரைசதம் கடந்தார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : 19.1 ஓவரில் சுருண்ட டெல்லி.. ஆர்சிபி அபார வெற்றி.. சிஎஸ்கேவுக்கு ப்ளே ஆஃப்-ல் பிரச்சனை

மேலும் வெற்றியை உறுதி செய்த பொழுது இந்த ஜோடி 78 பந்துகளில் 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தது. பகார் ஜமான் 6 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 40 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் முகமது ரிஸ்வான் 46 பந்தில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 75 ரன்கள், அசாம் கான் 10 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டம் இழக்காமல் 30 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 16.5 இலக்கை எட்டி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்திருக்கிறது. மேலும் தற்போதைக்கு தொடரை இழக்கும் வரலாற்றுத் தோல்வியில் இருந்து தப்பித்து இருக்கிறது.