18.3 ஓவர்.. நமீபியாவை வென்ற ஸ்காட்லாந்து.. இங்கிலாந்தின் அடுத்த சுற்றுக்கு சிக்கல்.. புதிய திருப்பம்

0
206
Scotland

இன்று டி20 உலக கோப்பை தொடரில் பி பிரிவில் வெஸ்ட் இண்டிஸ் பார்படாஸ் மைதானத்தில் ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்காட்லாந்து அணியின் வெற்றியின் காரணமாக இங்கிலாந்து அணிக்கு அடுத்த சுற்று முன்னேறுவதற்கு பிரச்சினைகள் உருவாகியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் எராஸ்மஸ் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அடுத்தபடியாக விக்கெட் கீப்பர் சான் கிரீன் 27 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழந்து 155 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து தரப்பில் வீல் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஸ்காட்லாந்து அணிக்கு கேப்டன் பெர்ரிங்டன் 35 பந்தில் 47 ரன்கள், பேட்டிங் கீழ் வரிசையில் மைக்கேல் லீஸ்க் 17 பந்தில் 35 ரன்கள் எடுக்க, அந்த அணி 18.3 ஓவரில் இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பி பிரிவில் பெரிய அணிகளாக ஆஸ்திரேலியா மற்றும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் இருக்கின்றன. இதற்கு அடுத்து ஸ்காட்லாந்து, நமீபியா மற்றும் ஒமான் அணிகள் இருக்கின்றன.

இந்த பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி மழையின் காரணமாக டிரா ஆனது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. தற்பொழுது ஸ்காட்லாந்து அணி மற்றொரு வலுவான நமீபியா அணியை வென்றிருக்கிறது. இதற்கு அடுத்து அவர்கள் பலம் குறைந்த ஒமான் மற்றும் பலமான ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடுவார்கள். இதில் ஓமான் அணிக்கு எதிராக ஸ்காட்லாந்து வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

இதையும் படிங்க : இதான்யா வேணும் அமெரிக்கா.. பாகிஸ்தானுக்கு அற்புதமான வேலையை பார்த்துட்டிங்க – கேன் வில்லியம்சன் பாராட்டு

இந்த நிலையில் இங்கிலாந்து அணி சிக்கல் இல்லாமல் அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியை வெல்ல வேண்டும். ஒருவேளை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோற்றால், ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளின் புள்ளி ஒரே அளவில் இருக்கும். அந்த நேரத்தில் ரன் ரேட் பார்க்கப்படும். இது இங்கிலாந்து அணிக்கு பெரிய தலைவலியை உண்டாக்கும். மேலும் இங்கிலாந்து அணி அடுத்து சிறிய அணியிடம் மோதும் பொழுது மழையின் காரணமாக போட்டி ட்ரா ஆனால் இன்னும் பெரிய சிக்கல் உருவாகிவிடும்.