வெஸ்ட் இண்டீஸ் இளம் சூப்பர் ஸ்டார் ஷாமர் ஜோசப்புக்கு.. பாகிஸ்தான் தந்த பரிசு

0
545
Joseph

சரிந்து கிடக்கும் வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டுக்கு திடீர் உற்சாகத்தை 24 வயதான வேகப்பந்துவீச்சாளர் ஷாமர் ஜோசப் கொடுத்து இருக்கிறார்.

தற்பொழுது ஆஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இன்டீஸ் அணி முதலில் விளையாடிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று என அபாரமான முறையில் டிரா செய்து இருக்கிறது.

- Advertisement -

இதற்கு மிக முக்கிய காரணமான வீரராக ஷாமர் ஜோசப் இருக்கிறார். முதல் டெஸ்டில் பதினோராவது வீரராக வந்து முக்கியமான 36 ரன்கள் எடுத்து, சர்வதேச முதல் போட்டியில் வீசிய முதல் பந்தில் ஸ்மித் விக்கெட்டை கைப்பற்றியதோடு, முதல் போட்டியிலேயே ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஆனால் அந்த போட்டியில் வெஸ்ட் இன்டிஸ் தோற்றது.

இதற்கு அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 216 ரன்கள் என்கின்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணியை 207 ரன்களில் ஏழு விக்கெட் கைப்பற்றி தடுத்து நிறுத்தி, 27 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் வெல்வதற்கு நாயகனாக இருந்தார்.

இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்த கடைசிப் பந்தில் இருந்து வெஸ்ட் இண்டிஸ் தாண்டி இந்தியா வரை விரும்பப்படும் வீரராக மாறி இருக்கிறார். ஏனென்றால் அவரது வாழ்க்கை வரலாறு அப்படிப்பட்டதாக இருக்கிறது.

- Advertisement -

இணையதள வசதியே இல்லாத குக்கிராமத்தில் பிறந்த அவர், கட்டிட தொழிலாளியாகவும், ஷாப்பிங் மால் காவலாளியாகவும் வேலை செய்து வந்தவர். வறுமை விரட்டினாலும் கிரிக்கெட் மேல் இருக்கும் காதலை விட முடியாமல் உள்ளூர் கிளப்புகளில் விளையாடி வந்தவர்.

வெஸ்ட் இண்டீஸ் டி 20 லீக்கில் கிரிக்கெட் அனலைசர் பிரசன்னா மூலம் வாய்ப்பைப் பெற்று கலக்கிய அவர், அங்கிருந்து வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு தேர்வாகி ஆஸ்திரேலியா வந்து சூப்பர் ஸ்டார் ஆக மாறி இருக்கிறார். இவரது கதை பல இளைஞர்களுக்கு ஊக்கத்தை கொடுப்பதாக அமைந்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணித்து தான் வெளியில் நடக்கும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாட மாட்டேன் என்று அறிவித்தும் விட்டார்.

இந்த நிலையில் அவருக்கு ஒரு பரிசாக பாகிஸ்தான் நடத்தும் பிஎஸ்எல் டி20 லீக்கில் பெசாவர் சல்மி அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் அட்கிஸ்டன் பெசாவர் ஷல்மி அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

இதையும் படிங்க : “தம்பி கரெக்டான ஜெர்சி நம்பரை செலக்ட் பண்ணி இருக்க” – ஹர்திக் பாண்டியா இளம் நட்சத்திரத்துக்கு பாராட்டு

ஆனால் இவர் தற்போது இந்தியா வந்திருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருக்கிறார். இந்தத் தொடர் மார்ச் நடுப்பகுதி வரை நடக்கிறது. அதனால் இதற்கு முன்பாக தொடங்கும் பாகிஸ்தான் பிஎஸ்எல் தொடரின் முதல் பாதியில் பெசாவர் சல்மி அணிக்காக விளையாட ஷாமர் ஜோசப் தேர்வாகி இருக்கிறார். அடுத்து கூடிய விரைவில் இவரை ஐபிஎல் தொடரிலும் பார்க்கலாம்.