“தம்பி கரெக்டான ஜெர்சி நம்பரை செலக்ட் பண்ணி இருக்க” – ஹர்திக் பாண்டியா இளம் நட்சத்திரத்துக்கு பாராட்டு

0
260
Hardik

ஐபிஎல் தொடரின் வெற்றி வெளிநாடுகளில் மட்டும் இல்லாமல், இந்திய மாநிலங்களிலும் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களும் தனிப்பட்ட டி20 தொடரை நடத்துவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

இந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் டி20 தொடர் தனிப்பட்ட முறையில் தமிழ்நாடு டிஎன்பிஎல் தொடர்போல நடத்தப்படுகிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் துவக்க வீரராக வந்து அதிரடியாக சதம் அடித்தது மட்டுமில்லாமல், அதே போட்டியில் மிதவேக பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி எல்லோரையும் பிரமிக்க வைத்தார் 18 வயதான அர்சன் குல்கர்னி.

இவரின் இந்த பேட்டிங் மற்றும் பந்துவீச்சு செயல்பாடு காரணமாக இவரை இந்தியாவின் அடுத்த ஹர்திக் பாண்டியா என பலரும் இப்போதே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் இவரை ஹர்திக் பாண்டியா அண்ணன் குர்னால் பாண்டியா விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு வாங்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை தொடரில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் துவக்க வீரராக வந்து 118 பந்துகளில் 108 ரன்கள் அடித்து அட்டகாசப்படுத்தி இருந்தார்.

இதன் காரணமாக இவர் மேலான எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட்டில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தொடர்ச்சியாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றத்தை இவர் காணும் பொழுது, இந்திய அணிக்கான வாய்ப்பை பெற்று விடுவார்.

இந்த நிலையில் இவரை பாராட்டி ஹர்திக் பாண்டியா வெளியிட்டுள்ள பதிவில் ” நேற்று மிகச் சிறப்பாக விளையாடினிர்கள் அர்சின். உங்கள் எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள். மேலும் சிறப்பான ஜெர்சி நம்பரை தேர்ந்தெடுத்ததற்கும் வாழ்த்துக்கள்” என தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஜடேஜா கேஎல்.ராகுல் விலகல்.. 3 புதிய வீரர்கள் அறிவிப்பு.. விளையாட யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்

அர்சின் குல்கர்னி இந்திய அண்டர் 19 அணியில் 33 என ஜெர்சி நம்பர் அணிந்து விளையாடுகிறார். இந்திய அணிக்காக ஹர்திக் பாண்டியா அணியும் ஜெர்ஸி நம்பரும் 33 என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் குறிப்பிட்டு அவரை வாழ்த்தியிருக்கிறார்.