இந்திய அணி ஜெயிக்காது.. இவங்க 4 பேர்ல ஒருத்தருக்கு தான் உலக கோப்பை – வாகன் சர்ச்சை கணிப்பு

0
9293

ஜூன் மாதம் டி20 உலக கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுவதை தொடர்ந்து, நேற்று இந்திய கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ அணியை அறிவித்தது. இதைத் தொடர்ந்து சில சர்ச்சைகளும், சலசலப்பும் ஏற்பட்டன.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் வாகன் இந்தியாவை தவிர்த்து நான்கு அணிகள் அரை இறுதிக்கு செல்லும் என்று கணித்திருந்த வேளையில் இந்திய ரசிகர்கள் தற்போது அவரை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்ற வரும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் முடிந்தவுடன் சில வாரங்கள் இடைவெளியில் டி20 உலக கோப்பை தொடர் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் மிக தீவிரமாக ஆயத்தமாகி வரும் நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் விளையாடும் வீரர்களை நேற்று அறிவித்தது.

இதே போல இந்திய அணியும் 15 பேர் கொண்ட இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இந்திய அணையின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்கின் பெயர் இடம்பெறவில்லை. மேலும் பந்துவீச்சும் மிக பலவீனமாக இருப்பது போல் தெரிகிறது. காரணம் பவர் பிளேவில் பும்ராவுடன் இணைந்து வீச ஒரு தரமான வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தமிழக வீரர் நடராஜனை இந்திய அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் ஒவ்வொரு ஐசிசி தொடர் தொடங்குவதற்கு முன்பாகவும் அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகள் என்ற தனது கணிப்பினை வெளியிடுவார். அதேபோல இந்த முறை அவர் வெளியிட்ட கணிப்பில் இந்திய அணி இடம்பெறவில்லை.

அவர் கணித்து வெளியிட்ட நான்கு அணிகளான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன. 2007ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணி இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இதனைக் கண்ட இந்திய ரசிகர்கள் மைக்கேல் வாகனக்கு பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:இந்தியா செலக்ட் பண்ணாத பிளேயர்கள் போனாலே.. டி20 உலக கோப்பையை ஜெயிப்பாங்க – கவாஸ்கர் பேட்டி

காரணம் மைக்கேல் வாகன் எப்போதெல்லாம் இந்திய அணியை ஆதரித்து அரை இறுதிக்குச் செல்லும் என்று பட்டியல் வெளியிடுகிறாரோ அப்போதெல்லாம் இந்திய அணி தடுமாறி லீக் சுற்று அல்லது அரையிறுதியோடு வெளியேறிவிடுகிறது. இதனால் தற்போது இந்திய அணி கண்டிப்பாக சாம்பியன் பட்டம் வெல்லும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். உதாரணமாக கடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையர்களுக்கு தகுதி பெறும் என்று கணித்திருந்தார். ஆனால் அவரது பட்டியலில் இல்லாத ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -