“இங்கிலாந்துக்காக இந்த வேலையை மட்டும் நாங்க செய்யவே மாட்டோம்” – இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் பேட்டி

0
145
Vikram

இந்திய அணியை உள்நாட்டில் வைத்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது உலக கிரிக்கெட்டில் தற்பொழுது பெரிய பேச்சாக மாறியிருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி பேட்டிங் முறையை பின்பற்றி வரும் இங்கிலாந்து அணியால் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான இந்தியாவில் வெற்றி பெற முடியாது என்று நிறைய கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கணித்திருந்தார்கள்.

- Advertisement -

இதைத் தாண்டி இங்கிலாந்து பேட்ஸ்மேன் போப் மற்றும் இங்கிலாந்து சுழற் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லி இருவரும் இந்திய தரப்பு எதிர்பார்க்காத வகையில் செயல்பட்டு இங்கிலாந்து அணியை வெல்ல வைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக இங்கிலாந்து அணி மைதானத்தின் இரண்டு பக்கவாட்டு பைக்கதிகளிலும் ரன் அடிப்பதற்காக ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை பயன்படுத்தி ரன்கள் குவித்தது. இது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பெரிய தலைவலியாக மாறியது. மேலும் கேப்டனுக்கு எந்த மாதிரியான பீல்ட் செட்அப் வைப்பது என்கின்ற குழப்பம் அதிகமானது.

இந்த முறையில் பேட்ஸ்மேன்கள் விளையாடும் பொழுது பந்துவீச்சாளர்கள் தங்களது லென்த்தை கொஞ்சம் கீழே இறக்கி பந்து வீச வேண்டியதாக இருக்கும். மேலே வீசினால் அடிப்பதற்கு சுலபம் ஆகிவிடும். ஆனால் மேலே வீசாமல் விக்கெட்டுகள் கைப்பற்ற முடியாது. அதே சமயத்தில் கீழே விழும் பொழுது சுலபமாக விக்கெட்டை தராமல் ஒன்று, இரண்டு ரன்களும் சேர்த்த முடியும். இதுதான் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

- Advertisement -

தற்பொழுது இதற்காக இந்திய அணி ஏதாவது மாற்றங்கள் செய்யுமா என பேசும் பொழுது, இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் உறுதியாக சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இந்த மாதிரியான ஆட்கள் நீங்கள் எப்பொழுதும் விளையாடக்கூடிய ஒன்று கிடையாது. எனவே நீங்கள் உங்கள் வழக்கமான பாணியில் விளையாடுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : கில் கிடையாது.. 3 ஃபார்மட்.. அடுத்த விராட் கோலியாக வாய்ப்புள்ள 3 இந்திய வீரர்கள்

உங்களால் அதிக ஷாட்கள் விளையாட முடியும் என்றால் நிச்சயம் அது அணிக்கு பயன் அளிக்கக் கூடிய ஒரு விஷயமாக இருக்கும். ஆனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் நேராக விளையாடும் பாரம்பரிய முறையில் பழக்கப்பட்டவர்கள். இப்படி விளையாடும் பொழுது மாடர்ன் கிரிக்கெட் ஷாட்கள் விளையாடுவதற்கான அவசியம் ஏற்படுவதில்லை. எனவே இந்திய வீரர்கள் தங்களுடைய வழக்கமான பாணியில் விளையாடுவார்கள். இங்கிலாந்துக்காக எந்த மாற்றமும் இருக்காது” என்று கூறியிருக்கிறார்.