கோலியை மாத்துங்க.. அந்த இடத்தை ரோகித் சர்மாவுக்கு கொடுங்க.. இதான் காரணம் – அஜய் ஜடேஜா பேச்சு

0
2289
Jadeja

நடப்பாண்டு ஜூன் மாதம் ஆரம்பத்தில் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பேட்டிங் ஆர்டர் குறித்து இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா மிக முக்கியமான வித்தியாசமான கருத்து ஒன்றைக் கூறியிருக்கிறார்.

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் டாப் ஆர்டர்களாக ஜெய்ஸ்வால் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மூவரும் இருக்கிறார்கள். மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக இந்த அணியில் யாரையும் பேக்கப் ஆக எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் ரோகித் சர்மா விராட் கோலி டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக வருவார்களா? என்பது குறித்து பெரிய விவாதம் சென்று கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் ஜெய்ஸ்வால் துவக்க வீரராக விளையாட வேண்டும் என்றும் சிலர் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

தற்பொழுது விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் பத்து போட்டிகளில் விளையாடி சரியாக 500 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான பட்டியலில் இரண்டாவது இடத்தில் தொடர்கிறார். இந்த ரன்களை அவர் ஆர்சிபி அணிக்கு துவக்காட்டக்காரராக விளையாடி கொண்டு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் யார் துவக்க ஆட்டக்காரர்களாக வர வேண்டும் என்பது குறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் வீர அஜய் ஜடேஜா கூறும் பொழுது ” என்னைப் பொறுத்தவரை விராட் கோலி துவக்க வீரராக வரவேண்டும். அப்பொழுது அந்த இடத்தில் இருந்து யார் வெளியேற வேண்டும் என்று கேட்டால், ரோகித் சர்மாதான் வெளியேற வேண்டும். அவர் விராட் கோலியின் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும்.

ஒரு கேப்டனாக அவருக்கு மனதில் நிறைய கேள்விகள் இருக்கிறது. எனவே அவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யும்பொழுது நேரம் கிடைக்கும். அதிலிருந்து கிடைக்கும் தெளிவில் அவர் மூன்றாவது இடத்தில் விளையாடலாம். மேலும் விராட் கோலி அணியில் இருப்பதால் எப்பொழுதும் நிலைத்தன்மை கிடைக்கும். அவர் நீண்ட நேரம் விளையாடக் கூடியவர். விராட் கோலி இருக்கிறார் என்றால் அவர் ஓப்பன் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய தேர்வு” எனக் கூறி இருக்கிறார்.

- Advertisement -