ஹெட்டுக்கு ஒரு நியாயம்.. கோலிக்கு ஒரு நியாயமா?.. களத்தில் குதித்த கைஃப் இர்பான் பதான்

0
314
Virat

நேற்று ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் வழக்கத்திற்கு மாறாக பொறுமையாக விளையாடி ரன்கள் சேர்த்து அணியையும் காப்பாற்றினார். தற்பொழுது இதை வைத்து விராட் கோலியை ஒப்பிட்டு முகமது கைஃப் மற்றும் இர்பான் பதான் இருவரும் ஸ்ட்ரைக் ரேட் குறித்து பேசி இருக்கிறார்கள்.

நேற்று டாஸ் வென்று ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை அவர்களது சொந்த மைதானத்தில் தேர்வு செய்தது. வழக்கத்திற்கு மாறாக ஹைதராபாத் ஆடுகளம் கொஞ்சம் மெதுவாகவும், அதே சமயத்தில் பந்து நல்ல அளவில் திரும்பக் கூடிய வகையிலும் இருந்தது. இதனால் அவர்களுக்கு பவர் பிளேவில் 36 ரன்கள் மட்டுமே வந்தது.

- Advertisement -

அதிரடிக்கு பெயர் பெற்ற ஹைதராபாத் ஜோடி டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தங்களுடைய இயல்பான இன்னிங்ஸ் விளையாட முடியாமல் தடுமாறினார்கள். இதில் அபிஷேக் ஷர்மா ஆட்டம் இழந்து விட, டிராவிஸ் ஹெட் 44 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 131.82 என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் விமர்சனத்திலேயே இருந்து வருவதும் கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய இர்பான் பதான் கூறும்பொழுது “ஹெட் அவரது திறமைக்கு, இப்படி விளையாடி நீங்கள் பார்த்தது கிடையாது. இங்கு ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது, அதனால் அவர் பொறுமையாக விளையாடினார் என்று என்ன சொன்னாலும், எல்லா கிரிக்கெட் வீரர்களையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும்.

இன்று ஹெட் விளையாடிய இன்னிங்ஸ் விராட் கோலி விளையாடு இருந்தால் உடனே மக்கள் விராட் கோலியின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் பற்றி பேச ஆரம்பித்து இருப்பார்கள். ஆனால் அதுவே ஹெட் விளையாடிய இன்னிங்ஸ் குறித்து பேசும்பொழுது, அணியின் வெற்றிக்கு அவர் பொறுப்பெடுத்துக் கொண்டு விளையாடியதாகப் பேசுகிறார்கள். எனவே அனைவரையும் சமமாக நடத்துங்கள்” என்று கூறுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலியை மாத்துங்க.. அந்த இடத்தை ரோகித் சர்மாவுக்கு கொடுங்க.. இதான் காரணம் – அஜய் ஜடேஜா பேச்சு

இந்த விவாதத்தில் இர்பான் பதானுடன் இருந்த முகமது கைஃப் கூறும் பொழுது “நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. இதே விராட் கோலி 44 பந்தில் 58 ரன்கள் எடுத்திருந்தால், இந்த மக்கள் நிச்சயம் விராட் கோலியின் ‘இவ்வளவு மெதுவாக விளையாடி இருக்கிறார்?’ என்று அவருடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி தான் பேசி இருப்பார்கள். இதற்கு என்னால் உத்தரவாதமே தர முடியும். ஆனால் ஹெட் விளையாடியது ஒரு நல்ல இன்னிங்ஸ் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.