கில் கிடையாது.. 3 ஃபார்மட்.. அடுத்த விராட் கோலியாக வாய்ப்புள்ள 3 இந்திய வீரர்கள்

0
218
Gill

இந்திய கிரிக்கெட் எப்பொழுதுமே உலக கிரிக்கெட் க்கு சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன்களை கொடுத்து வந்திருக்கிறது. பேட்ஸ்மேன்களே இந்திய கிரிக்கெட்டின் அடையாள வீரர்களாக இருந்திருக்கிறார்கள்.

சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி என இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் கலாச்சாரம் தொடர்ந்து வருகிறது.

- Advertisement -

இதில் விராட் கோலிக்கு பிறகு இந்த கலாச்சாரத்தை இந்திய கிரிக்கெட்டில் முன்னெடுக்கக்கூடிய பேட்ஸ்மேனாக சுப்மன் கில் இருப்பார் என பலரும் கணித்திருந்தார்கள்.

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடும் அவர், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சுமாரான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் அவருடைய பேட்டிங் அடிப்படையே தவறாக இருக்கிறது.

தற்போதைய நவீன கிரிக்கெட்டில் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் ஏற்ற மாதிரி தங்களை தகவல் வைத்துக் கொள்வது தான் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலாக இருக்கிறது. இதை தற்பொழுது மிகச் சிறப்பாக கையாளக்கூடிய ஒரே வீரராக விராட் கோலி மட்டுமே இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலிக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் வெற்றிகரமாக விளங்கக்கூடிய வாய்ப்பிருக்கின்ற மூன்று இந்திய வீரர்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

சாய் சுதர்ஷன் : தமிழ்நாட்டில் இருந்து இந்திய கிரிக்கெட்டுக்கு நீண்ட காலம் விளையாடக்கூடிய இளம் வீரராக இந்த இடது கை பேட்ஸ்மேன் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார். ஆச்சரியப்படும் விதமாக தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடருக்கு அழைக்கப்பட்ட இவர், பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் தொடர்ந்து இரண்டு அரை சதங்கள் அடித்து தன்னை நிரூபித்திருக்கிறார். மேலும் இவருடைய உள்நாட்டுப் புள்ளி விபரங்கள் மூன்று வடிவத்திலும் மிகச் சிறப்பாக இருக்கின்றன. எதிர்காலத்தில் இந்திய அணியின் மூன்று வடிவத்திலும் இவர் விளையாடலாம்.

ஜெய்ஸ்வால் : பேட்டிங்கின் வேகத்தை எந்த மாதிரியும் மாற்றி அமைக்கக்கூடிய, சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடக்கூடிய சிறப்பான இளம்வீரராக இருக்கிறார். இவருக்கு பணிச்சுமை அதிகம் தரக்கூடாது என்பதற்காக இன்னும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் தேர்வு செய்யவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இவர் மூன்று வடிவத்திலும் இந்திய அணிக்காக நிச்சயம் விளையாடுவார்.

இதையும் படிங்க : “ரோகித் அந்த முடிவு மட்டும் எடுக்காதிங்க.. உங்க டீம்க்கு சிக்கலாயிடும்” – ஹர்பஜன் சிங் கோரிக்கை

ருதுராஜ் கெய்க்வாட் : தற்போது இவரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் எதிர்கால இந்திய அணியின் வீரராக பார்க்கிறது. இதன் காரணமாக மூன்று வடிவ இந்திய அணிகளும் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தேர்வு செய்யப்படுகிறார். மூன்று வடிவத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக்கொள்ளக்கூடியபேட்டிங் திறமை இவரிடம் காணப்படுகிறது. எனவே கூடிய விரைவில் இவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடக்கூடிய வீரராகஇருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.