டி20 உ.கோ-ல் நடராஜன் இல்லாதது ஆச்சரியமா இருக்கு.. அவர் இந்த விஷயங்கள்ல வேற லெவல்ல இருக்காரு – ஷேன் வாட்சன் பேச்சு

0
230
Natarajan

சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் மட்டும் இல்லாமல், ரிசர்வ் வீரர்கள் பட்டியலிலும் தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர்நடராஜன் தேர்வு செய்யப்படவில்லை. இது தனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஒன்று செய்திருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியிருக்கிறார்.

நேற்று ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணிக்கு எதிராக தங்களது சொந்த மைதானத்தில் விளையாடிய போட்டி மிகவும் பரபரப்பான ஒன்றாக அமைந்தது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி கடைசி ஓவரில் ஒரு ரன் வித்தியாசத்தில் கடைசிப் பந்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

ஹைதராபாத் அணியின் இந்த திரில் வெற்றியில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜனின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. இந்தத் தொடர்பு முழுக்க அவர் ஹைதராபாத் அணிக்கு மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்திருக்கிறார். நேற்றைய போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலமாக, எட்டு போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான ஊதா நிறத் தொப்பியை கைப்பற்றி இருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் அவருடைய பந்துவீச்சு நிலைத்தன்மை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. அவருடைய யார்க்கர்கள் மிக அருமையாக விழுகின்றன. அதேபோல் பந்துவீச்சில் தேவையான அளவுக்கு கட்டர்களை அருமையாக பயன்படுத்துகிறார். இத்தோடு சேர்த்து சில மெதுவான சரியான பவுன்சர்களையும் வீசுகிறார்.

இதையெல்லாம் ஹைதராபாத் அணி நெருக்கடியில் இருக்கும் போது பந்துவீச்சில் செய்து அணியை காப்பாற்றுகிறார். பந்துவீச்சில் இவ்வளவு சிறப்பாக இருக்கும் பொழுது, வெஸ்ட் இண்டீஸ் நிலைமைகளுக்கு ஏற்ற பந்துவீச்சாளராக இருக்கும் பொழுது, அவர் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெறாதது பெரிய ஏமாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் ஷேன் வாட்சன் “யார்க்கரை மிகச் சரியாக வீசும் திறமை, பந்துவீச்சில் அவர் கொண்டு வரும் வேக மாறுபாடுகள் சிறப்பாக இருப்பதோடு, அவர் இதை எல்லாம் மீண்டும் மீண்டும் செய்கிறார். இதன் காரணமாகத்தான் அவர் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவரது நிலைத்தன்மை இவ்வளவு அருமையாக இருக்கும் பொழுது, பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் நிலையிலும் அவர் வந்து சிறப்பாக பந்து வீசும் பொழுது, அவர் இந்திய கிரிக்கெட் தாண்டி உலகக் கிரிக்கெட்டுக்கும் மகிழ்ச்சி தரக்கூடியவர்” என்று கூறியிருக்கிறார்.