“2வது டெஸ்டுக்கு இவர்கள் வேண்டாம்.. இந்த வீரரை மட்டும் கொண்டு வாங்க” – கும்ப்ளே இந்திய அணிக்கு யோசனை

0
347
Kumble

இங்கிலாந்து அணி இந்தியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆரம்பிப்பதற்கு முன்னால் இருந்த எதிர்பார்ப்புகளை விட, முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக வென்ற பிறகு மிக அதிகமாகி இருக்கிறது.

தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னால் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில், அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் இங்கிலாந்து அணி என்ன செய்யும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள்.

- Advertisement -

தற்போது இங்கிலாந்து அணி என்ன செய்யும் என்பதை அவர்கள் வெற்றியின் மூலமாக காட்டி விட்டார்கள். அவர்கள் அடுத்த போட்டிக்கு பெரிதான மாற்றங்கள் எதையும் செய்ய விரும்ப மாட்டார்கள். ஒரு மாற்றம் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

இந்த நிலையில் இந்திய அணியில் காயம் காரணமாக கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா விலகி இருப்பது பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. மேலும் இவர்களது இருவர் இடத்துக்கு வாஷிங்டன் சுந்தர், சவுரப் குமார் என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சர்பராஸ் கானும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அணியின் லெஜெண்ட் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் கும்ப்ளே இரண்டாவது டெஸ்டுக்கு இந்திய அணிக்கு தன்னுடைய யோசனை ஒன்றை முன் வைத்திருக்கிறார். அதில் புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை விடுத்து, 29 வயதான குல்தீப் யாதவை அணியில் சேர்க்குமாறு கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதற்கான காரணங்களை பேசிய அவர் கூறும் பொழுது “குல்தீப் யாதவ் இடம் வேரியேஷன் உண்டு. ஆனால் இங்கிலாந்து தங்களது திட்டங்களை எதையும் மாற்றிக் கொள்ளாமல் ஹைதராபாத்தில் என்ன செய்ததோ அதேதான் செய்வதற்கு விருப்பப்படும். விசாகப்பட்டினம் மைதானத்தில் ஆடுகளம் வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அது கொஞ்சம் மெதுவாக இருந்தாலுமே நல்ல ஆடுகளமாக இருக்கும். அங்கு நாம் நம் திறனை வைத்து செயல்பட வேண்டும்.

மேலும் இந்திய அணி வீரர்கள் சுழற் பந்து வீச்சை எதிர்த்து விளையாட சரியான முறையில் இருக்க வேண்டும். கடந்த போட்டியில் புட் வொர்க்கில் கூட தடுமாற்றங்கள் பார்ப்போம். மேலும் இரண்டு பேட்ஸ்மேன்கள் பாசிட்டிவாக இல்லாமல், சுழற் பந்துவீச்சை சரியாக விளையாடவில்லை.

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் இளம் சூப்பர் ஸ்டார் ஷாமர் ஜோசப்புக்கு.. பாகிஸ்தான் தந்த பரிசு

இங்கிலாந்து திடீரென பேட்டிங் செய்த விதத்தில் இந்திய அணி திகைத்துப் போனதை நான் உணர்ந்தேன். எனவே இந்திய அணி வழக்கத்திற்கு மாறான திட்டங்களை கொண்டு வரலாம். அவர்கள் இந்த வரையில் எந்த வித்தியாசமான ஒன்றையும் செய்ததில்லை. அதனால் இந்த முறை செய்ய முயற்சி செய்வார்கள்” என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.