1பந்து 2 ரன்.. புவி மேஜிக் பவுலிங்.. ராஜஸ்தானை ஹைதராபாத் வென்றது.. சிஎஸ்கே கீழே இறங்கியது

0
2461
IPL2024,

இன்று ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் 10 பந்துகளுக்கு 12 ரன், அன்மோல் ப்ரீத் சிங் 5 பந்துகளுக்கு 5 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இன்று மார்க்ரம் இல்லாததால் அந்த அணிக்கு நெருக்கடி நிலை உருவானது.

- Advertisement -

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ் ரெட்டி இருவரும் பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி 57 பந்துகளின் 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்த ஜோடியில் முதலில் டிராவிஸ் ஹெட் 44 பந்தில் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியாக நிதீஷ் குமார் ரெட்டி 42 பந்தில் 76* ரன்கள், கிளாசன் 19 பந்தில் 42* ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் ஹைதராபாத் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. ஆவேஸ் கான் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பட்லர் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் ரன் இல்லாமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்கள். அந்த அணி ஒரு ரன்னுக்கு இரண்டு விக்கெட்டை இழந்தது. இதற்கு அடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் இருவருக்கும் ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் மற்றும் அபிஷேக் ஷர்மா கேட்ச்சை தவறவிட்டார்கள்.

இதை பயன்படுத்திக் கொண்ட இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்கள். இந்த ஜோடி 78 பந்துகளில் 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தது. ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் 67 ரன்கள், சிறப்பாக விளையாடிய ரியான் பராக் 49 77 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து கடைசி நான்கு ஓவர்களுக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது. இதற்கு அடுத்து சிம்ரன் ஹெட்மையர் 9 பந்தில் 13 ரன், துருவ் ஜுரல் 3 பந்துக்கு 1 ரன் என வெளியேற, 11 பந்துக்கு 20 ரன்கள் தேவை என ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தளத்தில் ரோமன் பவல் மற்றும் அஸ்வின் நின்றார்கள்.

இதையும் படிங்க : 1 ரன் 2 விக்கெட்.. வின்டேஜ் புவி.. இன்ஸ்விங்கர் போல்ட்.. திகைத்துப் போன சஞ்சு சாம்சன்

இறுதியாக புவனேஸ்வர் குமாரின் கடைசி ஓவருக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, 5 பந்தில் 11 ரன்கள் கிடைத்தது. ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ரோமன் பவல் எல்பிடபிள்யு ஆக, பரபரப்பான இந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. மேலும் பத்தாவது போட்டியில் ஆறாவது வெற்றி பெற்று, சிஎஸ்கே அணியை விட கூடுதலாக இரண்டு புள்ளிகள் பெற்று, நான்காவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. ஏமாற்றம் அடைந்த சிஎஸ்கே அணி ஐந்தாவது இடத்திற்கு இறங்கி இருக்கிறது.