சூப்பர் ஓவர் போகலாம்னு நினைச்சேன்.. புவி மட்டுமல்ல நடராஜனும் செம பவுலர் – பாட் கம்மின்ஸ் பேச்சு

0
4946
Cummins

இன்று ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி தங்களது சொந்த மைதானத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் பரபரப்பான போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றியைப் பற்றி ஹைதராபாத் அணியின் பாட் கம்மின்ஸ் பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்து மூன்று விக்கெட் இழப்புக்கு மொத்தம் 201 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு ஹெட் 44 பந்தில் 58, நிதிஷ் ரெட்டி 42 பந்தில் 76 ரன்கள் எடுத்தார்கள். ஆவேஷ் கான் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் இருவரும் 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு பக்கத்தில் அணியை கொண்டு வந்து விட்டார்கள். ஆனால் இவர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது அந்த அணிக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்கி விட்டது.

புவனேஸ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் 1 பந்துக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்தப் பந்தை எதிர்கொண்ட வெஸ்ட் டி20 அணியின் கேப்டன் ரோமன் பவர் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கிளீன் எல்பிடபிள்யு ஆனார். இதன் காரணமாக பரபரப்பான போட்டியில் ஹைதராபாத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்குப் பின் பேசிய ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் “உண்மையில் அற்புதமான ஆட்டம். கடைசிப் பந்து வரை ஆட்டம் எங்கள் பக்கம் இருப்பதாக நான் நினைக்கவே இல்லை. இது டி20 கிரிக்கெட் இதில் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை முடித்து வைப்பதை நாம் பார்த்து பழகி விட்டோம். கடைசி அவருக்கு ஆட்டம் வரும் பொழுது எதுவும் நடக்கலாம் என்றுதான் நினைத்தேன். புவனேஸ்வர் குமார் ஆறு யார்க்கர் பந்துகளை அடித்தார். கடைசிப்பந்தில் விக்கெட் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. சூப்பர் ஓவர் போகலாம் என்று நினைத்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க: இதுதான் என்னோட இயல்பு.. நான் எதிர்பார்த்தது ரெண்டே பந்துக்கு மட்டும்தான் – புவனேஸ்வர் குமார் பேட்டி

இந்த இடத்தில் நடராஜனும் சிறந்த யார்க்கர் பவுலர்.அதே சமயத்தில் அவர்களும் நன்றாக பேட்டிங் செய்தார்கள். சிறந்த இரண்டு இளம் வீரர்களுக்கு நாங்கள் கொடுத்த கேட்ச் விட்டுக் கொடுத்த கேட்ச் வாய்ப்பு பெரிய விஷயமாக மாறியது. நிதிஷ் உண்மையில் அற்புதமானவர். அவர் நிலைமைகளை புரிந்து விளையாடுகிறார். தனக்கான பத்து பந்துகளை எடுத்துக் கொண்ட பிறகு சிறப்பான முறையில் பேட்டிங் செய்கிறார். அவர் இன்று இரண்டு ஓவர்களையும் வீசுகிறார். அவர் சிறந்த அற்புதமான வீரர்” என்று கூறி இருக்கிறார்.