கோலி 19வது 20வது ஓவர்ல விளையாடுவது காயப்படுத்துது.. மைல்கல் ஜெயிக்க உதவாது – வாசிம் ஜாபர் விமர்சனம்

0
1073
Virat

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பேட்டிங் யூனிட் மிகவும் தடுமாறி வருகிறது. அந்த அணியின் விராட் கோலி அதிக ரன்கள் அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை கைவசம் வைத்திருக்கிறார். அப்படி இருந்தும் அந்த அணிக்கு மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சரியான பங்களிப்பு செய்யவில்லை. அதே சமயத்தில் விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட் விவாதமாக மாறி வருகிறது. இது குறித்து வாசிம் ஜாபர் தனது கருத்தை கூறியிருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு தனி ஒரு வீரராக விராட் கோலி பேட்டிங்கில் போராடினாலும், அவருடைய ஸ்டிரைக் ரேட் ஆடுகளத்திற்கு ஏற்ற வகையில் இல்லை என்பது ஒரு விவாதமாக சென்று கொண்டிருக்கிறது. மற்ற அணிகளில் கடைசி கட்டத்தில் பெரிய ரன்களை பினிஷ் செய்யும் பொழுது, விராட் கோலி கடைசி வரை களத்தில் இருந்தாலும் பெரிய ரன்களை கொண்டுவர முடிவதில்லை.

- Advertisement -

ஆர்சிபி அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ஓவர்களுக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. அங்கிருந்து அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஆறு ஓவர்களுக்கு கைவசம் ஒன்பது விக்கெட்டுகள் இருந்தும் கூட அந்த அணியால் 200 ரன்களை தொட முடியவில்லை.

இந்த போட்டியில் விளையாடிய விராட் கோலி 67 பந்துகளில் சதம் அடித்தது, ஐபிஎல் வரலாற்றில் மிக மெதுவாக அடிக்கப்பட்ட சதமாக வேறு பதிவானது. மேலும் அதே போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் துவக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 58 பந்தில் சதம் அடித்தார். அந்தப் போட்டியை ஆர்சிபி தோற்க எல்லாம் சேர்ந்து இந்த விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.

இது குறித்து இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறும் பொழுது ” விராட் கோலி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்த போதும் கூட, 19ஆவது 20வது ஓவர்களில் அவர்கள் விளையாடிய விதம் காயப்படுத்தக்கூடியதாக அமைந்தது.15 முதல் 20 ஓவர்கள் வரை டெல்லி அணிக்கு எதிராக மும்பை விளையாடிய விதம்தான் அவர்களை வெற்றி பெற வைத்தது. அந்த அதிரடி இல்லை என்றால் மும்பை டெல்லி அணியிடம் தோல்வி அடைந்திருக்கும். இங்கு மைல்கற்கள் முக்கியம் கிடையாது. பேட்டிங்கில் கடினமாக விளையாடி வெற்றி பெறுவதுதான் முக்கியம்.

- Advertisement -

இதையும் படிங்க : ஓய்வு பெற்ற 2 வீரர்கள் வருகை.. பாபர் அசாம் மீண்டும் கேப்டன்.. பாகிஸ்தான் நியூசி டி20 தொடருக்கு அதிரடி முடிவு

முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு சதம் என்பது முக்கியமான விஷயமாக இருந்து வந்தது. இப்பொழுது அப்படி கிடையாது. தற்பொழுது ஆட்டத்தை வெல்வது தான் மிக முக்கியமானதாக இருக்கிறது. நீங்கள் இதற்காகத்தான் ரன்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் போட்டியை இழந்து விடுவீர்கள்” என்று கூறி இருக்கிறார்.