ஓய்வு பெற்ற 2 வீரர்கள் வருகை.. பாபர் அசாம் மீண்டும் கேப்டன்.. பாகிஸ்தான் நியூசி டி20 தொடருக்கு அதிரடி முடிவு

0
500
Pakistan

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்ததும், பாகிஸ்தான் அணிக்கான அனைத்து கிரிக்கெட் வடிவங்களுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகிக் கொண்டார். இந்த நிலையில் மீண்டும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நியூசிலாந்து அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஜூன் மாதம் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பைக்கு இந்த தொடரை முக்கியமானதாக பாகிஸ்தான் அணி நிர்வாகம் கருதுகிறது. எனவே புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

- Advertisement -

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 27ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. முதல் மூன்று போட்டிகள் ராவல்பிண்டி மைதானத்திலும் கடைசி இரண்டு போட்டிகள் லாகூர் மைதானத்திலும் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்த ஐந்து போட்டிக்கான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் பாகிஸ்தான் அணி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இடது கை வேகப்பந்து பேச்சாளர் முகமது அமீர் மற்றும் இடதுகை சுழல் பந்துவீச்சு ஆள் ரவுண்டர் இமாத் வாசிம் இருவரும் மீண்டும் இடம்பெற்று இருக்கிறார்கள். பாபர் அசாம் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதிவேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் காயம் காரணமாக இடம் பெறவில்லை.

இதுகுறித்து தற்போதைய தேர்வுக்குழு தலைவரான பாகிஸ்தான் முன்னாள் வீரர் வஹாப் ரியாஸ் கூறும்பொழுது “முகமது அமீர் மற்றும் இமாம் வாசிம் இருவரையும் சேர்ப்பது என்பது நேரடியான முடிவாகும். ஹாரிஸ் ரவுப் மற்றும் முகமது நவாஸ் இருவரும் காயம் அடைந்து இருப்பது இவர்களை சேர்ப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் இவர்கள் இருவருமே மறுக்க முடியாத மேட்ச் வின்னர்கள். மேலும் இவர்கள் தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : உம்ரான் மாலிக் மயங்க் யாதவ் 2 பேரும் இத செய்தே ஆகனும்.. இல்லனா முடிச்சு விட்டுருவாங்க – பிரையன் லாரா அறிவுரை

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி :

பாபர் அசாம் (கேப்டன்), அப்ரார் அகமது, அசம் கான், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது ரிஸ்வான், முகமது அமீர், முகமது இர்பான் கான், நசீம் ஷா, சைம் அயூப், ஷதாப் கான், ஷஹீன் ஷா அப்ரிடி, உசாமா மிர், உஸ்மான் கான், ஜமான் கான்