ரோகித் கோலிக்கு இது கடைசி டி20 உலககோப்பை மட்டும் கிடையாது.. இதுவுமே முடிய போகுது – வாசிம் ஜாபர் பேட்டி

0
39
Jaffer

இன்று இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 உலகக்கோப்பை தொடரில் பெரிய போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பில் பெரிய சவால்களை ஏற்படுத்தாது. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு இந்த போட்டி முக்கியமானது. இந்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து வாசிம் ஜாஃபர் பேசியிருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதிக்கொள்ள இருக்கும் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேற்றினால், அது 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி தோல்விக்கு பழி தீர்ப்பதாக அமையும் என இந்திய ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

- Advertisement -

மேலும் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் துவக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணிக்கு வரும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இன்னும் பெரிய இன்னிங்ஸ் எதுவும் விளையாடவில்லை. அவர்களிடமிருந்து 50 ரன் பார்ட்னர்ஷிப் எதுவும் கிடைக்கவும் இல்லை.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 2026 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற மாட்டார்கள் என வாசிம் ஜாபர் கூறியிருக்கிறார். அத்தோடு அவர் சில முக்கியமான விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.

இது குறித்து வாசிம் ஜாபர் கூறும் பொழுது “நடப்பு டி20 உலக கோப்பை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு கடைசி உலகக்கோப்பை தொடராக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் இந்த டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் இருவருமே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார்கள் என்று நினைக்கிறேன். இது அவர்களுடைய முடிவாகவும் இருக்கலாம் இல்லை தேர்வாளர்கள் முடிவாகவும் இருக்கலாம். மற்றபடி அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள். சர்வதேச டி20 போட்டியில் தற்பொழுது அவர்களைப் பார்ப்பதுதான் கடைசியாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : அநியாயமா வெ.இ தோத்துப் போச்சு.. இதுக்கு காரணம் இவரோட பொறுப்பில்லாத வேலைதான – அம்பதி ராயுடு விமர்சனம்

மேலும் விராட் கோலியால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதங்கள் அடிக்க முடியும். அவருக்கு விளையாடுவதற்கான நேரம் இருக்கிறது. மேலும் அவருடைய உடல் தகுதி மற்றும் அவர் சீராக விளையாடும் முறை ஆகியவற்றால் அவர் 100 சதங்கள் அடிப்பார் என நான் 100% நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.