ரோஹித் இப்படி முடிவெடுக்க அந்த போட்டிதான் காரணம்.. அங்கிருந்துதான் எல்லாமே மாறியது- தினேஷ் கார்த்திக் கூறும் சீக்ரெட்

0
235

இன்று நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்த்து இரண்டாவது அரையிறுதி போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் ரோகித் சர்மாவின் பேட்டிங் அணுகுமுறை குறித்து சில முக்கியமான ரகசியங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி கவனிக்கத்தக்க வகையில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக களம் இறங்கும் வீரர்கள் அனைவருமே செட்டிலாக ஓரிரு பந்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டு, அதற்குப் பிறகு அதிரடி ஆட்டத்தை ஆட ஆரம்பிக்கின்றனர். ஆனால் ரோஹித் சர்மா தான் களமிறங்கிய முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை கையில் எடுக்கிறார்.

இதனால் இந்திய அணி தனிநபராக 50 அல்லது 100 ரன்கள் அடிக்காமலேயே எளிதாக 190 ரன்களுக்கு மேல் குவித்து விடுகிறது. களமிறங்கும் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் 15 முதல் 20 பந்துகளை எதிர் கொண்டு அதிரடியாக விளையாடி 40 ரன்களுக்கும் மேலாக குவித்து விட்டு செல்கின்றனர். இந்திய அணி இப்படி அதிரடியாக விளையாடுவதற்கு காரணமே 2022ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்விதான் என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

மேலும் ரோகித் சர்மாவின் பேட்டிங் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் அவரது நெருங்கிய நண்பரான தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்வி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு அணியின் கேப்டனாகவும் பேட்ஸ்மேன் ஆகவும் அங்கிருந்து அவர் மாற்றத்தை எதிர்நோக்கி நகர்ந்தார். அந்த ஒரு போட்டியில் சராசரிக்கும் குறைவான ரன்களையே நாம் பதிவு செய்திருந்தோம்.

- Advertisement -

அந்தப் போட்டியில் இருந்துதான் ரோஹித் சர்மா ஒரு முடிவை எடுத்தார். இது டி20 கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏற்றபாணி அல்ல. நாம் இன்னும் அட்டாக்கிங் கிரிக்கெட் விளையாட வேண்டும். அட்டாக்கிங் கிரிக்கெட் விளையாடுவதுடன் ஆக்ரோஷமாகவும் இருக்க முயற்சி செய்ய வேண்டும். சுமார் இரண்டு ஆண்டுகளாகவே ரோஹித் சர்மா இதே பாணியில்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார். இதனால் அணி வீரர்களும் அவரது பாணியை பின்பற்றி இதே முறையில்தான் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க:ஐசிசி நல்லா ஏமாத்திட்டாங்க.. இப்படித்தான் எங்களுக்கு செய்வீங்களா.. சிக்கலில் மாட்ட விருப்பம் இல்லை – ஆப்கான் கோச் பேட்டி

இந்த டி20 உலக கோப்பை இந்திய அணியின் மாற்றம் பலருக்கும் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் முதலில் பேட்டிங் செய்யும்போது ஆக்ரோஷமாக அட்டாக்கிங் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். எனவே இதே போன்ற அணுகுமுறையை இங்கிலாந்து அணிக்கு எதிரான அரைஇறுதிப் போட்டியிலும் விளையாட வேண்டும்” என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.