அநியாயமா வெ.இ தோத்துப் போச்சு.. இதுக்கு காரணம் இவரோட பொறுப்பில்லாத வேலைதான – அம்பதி ராயுடு விமர்சனம்

0
192
Ambati

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெளியேறி இருக்கிறது. அந்த அணியின் இந்த தோல்விக்கு மிக முக்கியமாக ஒரு வீரர்தான் காரணம் என கடுமையாக அம்பதி ராயுடு விமர்சனம் செய்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்து வீசியது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. இதனால் ஆரம்ப கட்டத்தில் முக்கிய விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் இழந்தது. இருந்தபோதிலும் ரோஸ்டன் சேஸ் 42 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது பேட்டிங் முனையில் அகேல் ஹுசைன் இருக்க, பந்துவீச்சு முனையில் ரசல் இருந்தார். மேலும் அவர் ஒன்பது பந்துகளில் அதிரடியாக 15 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த நிலையில் தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஓடி ரசல் ரன் அவுட் ஆனார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதே போட்டியில் ஷாய் ஹோப் கோல்டன் டக் மற்றும் மார்க்ரம் பந்துவீச்சில் பூரன் 1 ரன் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பிறகு விளையாட வந்த தென் ஆப்பிரிக்கா கொஞ்சம் நெருக்கடியில் இருந்த போதிலும் பந்துக்கும் ரன்னுக்குமான வித்தியாசம் பெரிதாக இல்லாத காரணத்தினால் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் 16.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சொந்த மண்ணில் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

- Advertisement -

இதையும் படிங்க : நான் அந்த விஷயம் பத்தி சொல்ல மாட்டேன்.. ஆனா இத வச்சுதான் எல்லாம் நடக்குது – இந்திய பவுலிங் கோச் பேட்டி

இதுகுறித்து அம்பதி ராயுடு கூறும் பொழுது ” மூன்று ஓவர்கள் மீதம் இருந்த நிலையில், ரசல் வெஸ்ட் இண்டீஸ் அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்று இருக்க முடியும். ஆனால் அவர் தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஓடி ஆட்டம் இழந்து பின்னடைவை உண்டாக்கி விட்டார். ரசல் தன்னுடைய அணியை அழுத்தத்திற்கு உட்படுத்தியதற்கான பழிக்கு தகுதியானவர். இறுதியாக போட்டியில் இவருடைய ரன் அவுட் தான் வித்தியாசமாக இருந்தது” என்பது நிரூபிக்கப்பட்டது என்று கூறி இருக்கிறார்.