இந்தியாவுக்கு நிச்சயம் அதிர்ஷ்டம் அடிக்கும்.. அதுக்கு முக்கிய காரணம் இந்த சம்பவம்தான் – அம்பதி ராயுடு பேச்சு

0
449
Ambati

நடப்பு டி20 உலகக்கோப்பையில் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டி மழையின் காரணமாக தாமதம் ஆகிக்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும் என அம்பதி ராயுடு கூறியிருக்கிறார்.

இந்த உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரையில் இந்திய அணி கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை விளையாடியது போலவே மிகவும் ஆக்ரோஷமான முறையில் நம்பிக்கையாக அணியாக விளையாடுகிறது.

- Advertisement -

மேலும் கடந்த உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடியது போல தற்பொழுதும் விளையாடி வருகிறார். கடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். அந்த இடத்தில் கூட சதத்தை நோக்கி அவர் விளையாடவில்லை. இதேபோல் அணியில் உள்ள ஒவ்வொருவரும் சுயநலம் இல்லாமல் விளையாடுகிறார்கள்.

தற்போது இந்திய அணியின் இந்த அணுகுமுறை குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பாராட்டி பேசியதோடு, தாங்களும் அதே மாதிரியான அணுகுமுறை கொண்டவர்கள் எனவே நடைபெறும் போட்டி மிகவும் தீவிரமானதாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து அம்பதி ராயுடு கூறும்பொழுது “இந்திய அணியில் ஒரு அற்புதமான சூழல் இருக்கிறது. அனைவரும் அமைதியாகவும் கம்போஸ் ஆகவும் இருக்கிறார்கள். அவர்கள் மிகச் சிறப்பாக தயாராகி விட்டார்கள் என்று நினைக்கிறேன். ரோகித் சர்மாவும் மிகவும் அமைதியாக இருக்கிறார். அணியில் அவர்களுடைய ரோல் அனைவருக்கும் தெரியும். கட்டுப்படுத்தக்கூடிய விஷயம் எதுவாக இருந்தாலும் அவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள். கட்டுப்படுத்த முடியாதது அதிர்ஷ்டம் மட்டும்தான். ஆனால் இவர்கள் தன்னலம் இல்லாமல் விளையாடுவதால் நிச்சயம் அதிர்ஷ்டம் இவர்களுக்கு கை கொடுக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த இந்திய வீரர்.. என்னை விட 1000 மடங்கு சிறந்தவராக இருக்கிறார்- லெஜண்டரி கேப்டன் கபில்தேவ் பேட்டி

விராட் கோலி பயிற்சியின் போது பந்துவீச்சாளர்களை அடிப்பது மற்றும் சுழல் பந்துவீச்சாளர்களின் லென்த்தை அழகாக கணிப்பது என மிகவும் சிறப்பாக இருக்கிறார். அவர் பெரிய ஸ்கோரை பெறுவதற்கு கொஞ்சம் நேரம் ஆகும் என்று உணர்கிறார். அவர் தற்போது கொஞ்சம் பார்மில் இல்லை. அவர் வழியில் விஷயங்கள் நடப்பதற்கு அவருக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. நிச்சயம் அவருக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும்” என்று கூறியிருக்கிறார்.