இந்த இந்திய வீரர்.. என்னை விட 1000 மடங்கு சிறந்தவராக இருக்கிறார்- லெஜண்டரி கேப்டன் கபில்தேவ் பேட்டி

0
1295

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள டி20 உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டி கயானா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரரான கபில் தேவ் இந்திய அணி வீரர்கள் குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போதைய டி20 உலக கோப்பையை பொறுத்த வரை இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் மிக வலுவான அணியாக விளங்குகிறது. பேட்டிங்கில் ஒரு சில வீரர்களைத் தவிர அனைவருமே தற்போது நல்ல பார்மில் இருக்கிறார்கள். குறைந்த பந்துகளை எதிர் கொண்டு அதிக ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாடக்கூடிய வீரர்களாக இருக்கிறார்கள்.

மேலும் பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணியின் முக்கிய தூண்களாக குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் விளங்குகின்றனர். குறிப்பாக பும்ரா இந்திய அணியின் முக்கிய துருப்புச் சீட்டு வீரராக விளங்குகிறார். இந்தத் தொடரின் இந்திய அணி வெற்றி பெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது பெற்ற பும்ரா மொத்தமாக ஆறு போட்டிகளில் விளையாட இதுவரை 11 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் 4.08 என்ற எக்கானமியில் சிறப்பான வீரராக இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் லெஜண்டரி கேப்டன் கபில்தேவ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பும்ரா தன்னை விட சிறந்த வீரர் என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “இந்திய அணி வீரரான பும்ரா என்னை விட 1000 மடங்கு சிறந்த வீரராக இருக்கிறார். அற்புதமான பங்களிப்பை இந்திய அணிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர் இதே போல வரும் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

- Advertisement -

தற்போதைய இந்திய இளம் வீரர்கள் எங்களை விட சிறந்தவர்களாக இருக்கிறார்கள். எங்களுக்கு அதிக அனுபவம் இருந்தது. ஆனால் சிறந்தவர்கள் என்றால் அது தற்போதைய இந்திய வீரர்கள் தான். ஏனென்றால் அவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். அற்புதமானவர்களாக இருக்கிறார்கள். மேலும் நல்ல குணத்துடனும் சிறந்த வீரர்களாக விளங்குகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:ரோஹித் இப்படி முடிவெடுக்க அந்த போட்டிதான் காரணம்.. அங்கிருந்துதான் எல்லாமே மாறியது- தினேஷ் கார்த்திக் கூறும் சீக்ரெட்

கபில்தேவ் அளித்த இந்த ஒரு பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்று நடைபெற இருக்கிற அரைஇறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி மேலும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இந்த டி20 உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைத்து இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. அதை இந்திய அணி நிறைவேற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.