இந்திய கிரிக்கெட்டில் தரத்துக்கு மரியாதை கிடையாது.. கம்பீர்தான் இதை மாற்ற சரியான ஆள் – வாசிம் அக்ரம் பேச்சு

0
472
Akram

நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் ஆரம்பித்து இறுதி வரையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் என இரு நாடுகளில் ஐசிசி நடத்தும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த காலகட்டத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

இதற்கு அடுத்து புதிய பயிற்சியாளரை கொண்டு வருவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் விண்ணப்பங்களை வாங்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டாலும் கூட, அவர் மேற்கொண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை விரும்பவில்லை என்று.

- Advertisement -

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஸ்டீபன் பிளமிங், ரிக்கி பாண்டிங், கவுதம் கம்பீர் ஆகியோரை இந்திய கிரிக்கெட் வாரியம் அணுகி வருவதாககூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இது குறித்து என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பது இதுவரையில் வெளியில் செய்தியாக எதுவும் வரவில்லை.

இந்த நிலையில் வாசிம் அக்ரம் இது குறித்து பேசும்பொழுது “இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு கம்பீர்தான் மிகவும் சரியானவர். ஆனால் அதை அவர் ஏற்றுக் கொள்வாரா? என்பது குறித்து தெரியவில்லை. அரசியல் அதிக நேரத்தை எடுக்கும் வேலை என்கின்ற காரணத்தினால் தான் அதில் இருந்து விலகி விட்டார். இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பும் அதிக நேரத்தை எடுக்க கூடியது. அவருக்கு இரண்டு அழகான குழந்தைகள் உண்டு. அவர் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டும்.

கம்பீர் மிகவும் நேரடி ஆனவர் கண்டிப்பானவர் ஆனால் கடினமானவர் கிடையாது. அவர் எப்பொழுதுமே தெளிவாகவும், அப்பட்டமாகவும் இரண்டு முறைக்கு யோசிக்காமல் எடுத்ததும் பேசக்கூடியவர். உங்கள் முகத்திற்கு நேராகவே சொல்லிவிடுவார். ஆனால் நம்முடைய கலாச்சாரத்தில் நாம் புண்படுத்தாமல் பேச வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆனால் கம்பீர் இதற்கு மாறானவர். இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தில் வெளிப்படையான செயல்பாட்டு தரத்திற்கு முக்கியத்துவம் இருந்தது கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலிய டீமை விட்டு வெளியே அனுப்ப.. இந்தியாவுல பிளான் பண்ணிட்டே இருக்காங்க – ரிக்கி பாண்டிங் கருத்து

நான் வேறு சில பெயர்களையும் கேள்விப்பட்டேன். அதில் நெக்ரா மிகவும் முக்கியமானவர். அவருடன் பணியாற்றுவதற்கு வீரர்கள் மிகவும் விரும்புகிறார்கள். அவரும் பயிற்சியாளராக இதுவரையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறார். மேலும் ராகுல் டிராவிட் மற்றும் அதற்கு முன்னாள் ரவி சாஸ்திரி இருவரும் சிறந்த முறையில் செயல்பட்டவர்கள்” என்று கூறி இருக்கிறார்.