12.1 ஓவர்.. பங்களாதேஷ் இதை செய்யும்னு தெரியும்.. அதுக்காக இந்த பிளான் பண்ணினோம் – நவீன் உல் ஹக் பேட்டி

0
206
Rashid

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை பரபரப்பான போட்டியில் வென்றது. ஆப்கானிஸ்தான் அணியின் இந்த வெற்றியால் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் அரையிறுதி வாய்ப்பில் இருந்து வெளியேறி இருக்கின்றன. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற நவீன் உல் ஹக் போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் டாஸ் என்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் குர்பாஸ் நிதானமாக விளையாடி 55 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்தது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்ததால் அதை உணர்ந்து ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு கடைசியில் இரண்டு விக்கெட்டுகள் கைவசம் இருக்க, ஒன்பது பந்துகளில் ஒன்பது ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இந்த நேரத்தில் பந்து வீசிய நவீன் உல் ஹக் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெடுகளையும் கைப்பற்றி ஆப்கானிஸ்தான் அணிக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக ஒரு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. பவர் பிளேவில் இரண்டு விக்கெட்டுகளையும் இறுதியில் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றிய நவீன் உள் ஹக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற நவீன் உல் ஹக் பேசும் பொழுது “கடந்த சில வருடங்களாக இப்படியான வெற்றிக்காக நாங்கள் மிகக் கடுமையாக உழைத்து வருகிறோம். இந்த நாளுக்காக நாங்கள் கனவு கண்டு உழைத்தோம். இது ஒரு அதிசயமான உணர்வு. மேலும் 12.1 ஓவரின் இலக்கை துரத்த பங்களாதேஷ் அணி வரும் என்று எங்களுக்கு தெரியும். இதன் காரணமாக நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம்.

- Advertisement -

இதையும் படிங்க : வெளியில எங்களை நம்புனது அந்த ஒரே மனுஷன்தான்.. அவரை ஏமாற்றாம அடிச்சு வந்திருக்கோம் – ரஷீத் கான் பேட்டி

எங்கள் திட்டம் எளிமையாக இருந்தது. நாங்கள் பவர் பிளேவில் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினோம். இந்தப் போட்டிகள் எங்கு முடியும் என்று தெரியாது. திடீரென உங்கள் கைகளை விட்டுப் போனது போல இருக்கும். ஆனால் ஒரே ஒரு விக்கெட் உங்களை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வரும். இது ரன் அடிக்கக்கூடிய ஆடுகளம் இல்லை. எனவே நீங்கள் போட்டியில் தொடர்ந்து இருப்பீர்கள். இதற்காக கடுமையாக உழைத்து அரையிறுதி வந்ததில் மகிழ்ச்சி” என்று கூறி இருக்கிறார்.