ஸ்ப்ரிட் ஆப் கிரிக்கெட்டுக்கு இந்த நாடகம் எதிரானது.. ஆப்கானிஸ்தான் செய்தது சரியா.. ரஷித் கான் விளக்கம்

0
1387
Rashid

இன்று டி20 உலகக்கோப்பையில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட கொண்ட போட்டிமிகவும் பரபரப்பான சம்பவங்களை உள்ளடக்கியதாக இருந்தது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதின் நைப் காயம்பட்டதாக திடீரென மைதானத்தில் விழுந்தது தற்பொழுது சர்ச்சையாக மாறி வருகிறது. இதுகுறித்து அணியின் கேப்டன் ரஷீத் கான் விளக்கம் அளித்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியின் சிறப்பு என்னவென்றால், இந்த போட்டியின் முடிவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியா என மூன்று அணிகளில் ஒரு அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்கின்ற நிலை இருந்தது. இதன் காரணமாக இந்த போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. இந்த ரண்களை 12.1 ஓவரில் வெற்றிகரமாக துரத்தினால் பங்களாதேஷ் அணி தகுதி பெற முடியும், ஆப்கானிஸ்தான் வென்றால் அந்த அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். இல்லை 12.1 ஓவர் தாண்டி பங்களாதேஷ் என்றால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெறும் இன்று ஒரே போட்டிக்குள் பல விஷயங்கள் வந்தது.

இந்த நேரத்தில் பங்களாதேஷ் அணி இலக்கை நெருங்கிக் கொண்டிருந்த பொழுதும் மழை வந்தது. அப்பொழுது நடுவர் ஆட்டத்தை நிறுத்தவில்லை. அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான அணி டக்வொர்த் லீவிஸ் விதியில் முன்னணியில் இருந்தது. இதன் காரணமாக போட்டியை மேற்கொண்டு நடக்க விடாமல் ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதின் நைப் காயம் பட்டதாக தரையில் விழுந்தார். உடனே போட்டியும் மழையால் நின்றது. ஆனாலும் உடனடியாக போட்டி ஆரம்பிததது.

- Advertisement -

இதையும் படிங்க : என்னா நடிப்புடா சாமி.. ஆப்கான் கோச் செய்த வேலை.. விலகி சென்ற பிராவோ.. கால்பந்தை ஞாபகப்படுத்திய நொடிகள்

இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் கூறும் பொழுது “அவருக்கு ஏதோ தசைப்பிடிப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அவருக்கு என்ன நடந்தது என்று எனக்கு சரியாக தெரியாது. இது குறித்து சமூக வலைதளங்களில் என்ன சென்று கொண்டிருக்கிறது என்பது குறித்தும் எனக்கு தெரியாது.
ஆனால் இந்தப் போட்டியில் இது ஒரு பொருட்டு கிடையாது. ஏனென்றால் இந்த விவகாரம் போட்டியில் எந்த பெரிய வித்தியாசத்தையும் உருவாக்கவில்லை. இதனால் ஓவர்களும் குறைக்கப்படவில்லை. உடனே மழை நிற்க நாங்கள் உடனே திரும்பி வந்து விளையாடினோம். அது ஒரு காயம் எனவே அதற்கு கொஞ்சம் நேரம் தேவை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -