என்னா நடிப்புடா சாமி.. ஆப்கான் கோச் செய்த வேலை.. விலகி சென்ற பிராவோ.. கால்பந்தை ஞாபகப்படுத்திய நொடிகள்

0
1750
Trott

இன்று டி20 உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் மழை ஒரு முக்கியமான அங்கமாக இருந்தது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்று அரையிறுதியை எட்டியது. இந்த போட்டிக்கு நடுவில் மழை பெய்த பொழுது ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனதன் செய்த ஒரு காரியம் தற்பொழுது பலராலும் பேசப்பட்டு வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி விக்கெட்டுகள் கைவசம் இருந்தபோதிலும் 115 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அளவிற்கு ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. இதை உணர்ந்து அவர்கள் பொறுமையாகவே விளையாடினார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் இந்த ஆடுகளத்தில் பங்களாதேஷ் அணி அதிரடியாக ஆட வேண்டிய கட்டாயம் இருந்தது. ஏனென்றால் அவர்கள் 12 புள்ளி ஒன்று ஓவரில் இலக்கை எட்டினால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்கின்ற சூழல் இருந்தது.

இதன் காரணமாக அவர்கள் வேகமாக விளையாடச் சென்று விக்கெட்டுகளை கொடுத்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் தங்களால் முடியாது என்று தெரிந்து வெற்றி பெற்று தாங்கள் வெளியேறுவது மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தான அணியை வெளியேற்ற முயற்சி செய்தார்கள். இந்த நேரத்தில் நடுவில் மழை குறுக்கிட்டது. அப்பொழுது டக்வார்த் லீவிஸ் விதிப்படி ஆப்கானிஸ்தான் அணி சில ரன்கள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தது.

நடுவர் போட்டியை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது களத்திற்கு வெளியே நின்ற ஜோனதன் டிராட் ஆட்டத்தை நிறுத்தி பொறுமையாக விளையாடும் படி கூறினார். உடனே களத்தில் இருந்த குல்பதின் நைப் காயம் ஏற்பட்டதாக நடித்து கீழே விழுந்தார். அங்கு பிசியோ வந்து சோதனை செய்ய மழை வலுத்தது. எனவே போட்டி நிறுத்தப்பட்டது. இந்த நேரத்தில் ஆப்கான் பயிற்சியாளர் பக்கத்தில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ இதைக் கண்டு விலகிச் சென்று விட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : 12.1 ஓவர்.. பங்களாதேஷ் இதை செய்யும்னு தெரியும்.. அதுக்காக இந்த பிளான் பண்ணினோம் – நவீன் உல் ஹக் பேட்டி

அந்த நேரத்தில் ஒரு பந்தை வீசி அந்த பந்து பவுண்டரிக்கு சென்று இருந்தால், பங்களாதேஷ் முன்னணியில் இருந்திருக்கும். மழை தொடர்ந்து அப்போது பெய்திருந்தால் ஆப்கான் பரிதாபமாக வெளியேறி இருக்கும். தற்பொழுது ஆப்கான் அணியின் பயிற்சியாளரின் அறிவுரையையும், அதற்கு குல்பதின் நைப் நடித்ததும், சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.