விராட் கோலிய டீமை விட்டு வெளியே அனுப்ப.. இந்தியாவுல பிளான் பண்ணிட்டே இருக்காங்க – ரிக்கி பாண்டிங் கருத்து

0
1727
Virat

17ஆவது ஐபிஎல் சீசன் இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. இதைத்தொடர்ந்து அடுத்து ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் டி20 உலகக் கோப்பைத் தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. இதில் இந்திய அணி மற்றும் விராட் கோலி குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடியான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே டி20 உலக கோப்பையில் விராட் கோலியை தேர்வு செய்யலாமா வேண்டாமா? என்கின்ற விவாதம் யாராலும் உருவாக்கப்பட்டு அது காட்டுத் தீ போல பரவி விட்டது. சிலர் அவரை தேர்வு செய்யக்கூடாது என்று பேசி வந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 67 பந்தில் விராட் கோலி சதம் அடிக்க, அந்த மெதுவான சதம் சமூக வலைதளங்களில் மீண்டும் பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. அவர் டி20 கிரிக்கெட்டுக்கு சரி வர மாட்டார் என்று உறுதியாக பேச ஆரம்பித்தார்கள்.

இப்படியான நிலையில் அவர் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதே சமயத்தில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு 155 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி அசத்தி 708 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியையும் கைவசம் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “விராட் கோலி விஷயத்தில் இது வேடிக்கையானது. அவரை தேர்வு செய்யாமல் இருப்பதற்கும், அவர் டி20 கிரிக்கெட் க்கு சரி வர மாட்டார் என்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்கவும் மக்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இந்திய அணிக்காக என்னுடைய முதல் தேர்வு விராட் கோலிதான்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல்-லை விட்டு.. இங்கிலாந்து வீரர்கள் வெளியே போனத.. நான் பாராட்டறேன் – பாக் சக்லைன் முஸ்டாக் பேச்சு

நான் இது தொடர்பாக ஐசிசி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியின் உரையாடலின் போது கூட தெரிவித்திருந்தேன். பெரிய போட்டிகள் என்று வரும் பொழுது அவரைப் போன்ற அனுபவமும் தரமும் கொண்ட ஒரு வீரரை நீங்கள் வெளியில் வைக்கவே முடியாது. தற்பொழுது ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் கூட, விராட் கோலியின் ரோஹித் சர்மாவும் துவக்க வீரராக வருவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.