ரோகித் படை இப்ப சாக்கு சொல்லவே முடியாது.. இந்த காரணத்தால சரியா சிக்கிட்டாங்க – வாசிம் அக்ரம் பேட்டி

0
1159
Akram

இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் நேற்றுடன் முடிவு பெற்றது. இந்த நிலையில் இதற்கு முன்பாகவே டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக ரோஹித் சர்மா தலைமையில் ஒரு குழு அமெரிக்கா சென்றிருக்கிறது. இது குறித்து வாசிம் அக்ரம் தற்பொழுது முக்கியமான கருத்து ஒன்றைக் கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத அணிகளில், டி20 உலக கோப்பை இந்திய அணிகள் தேர்வாகி இருக்கும் வீரர்கள் முன்கூட்டியே நியூயார்க் புறப்பட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது.

- Advertisement -

இதற்கு தகுந்தபடியே ரோகித் சர்மா தலைமையில் ஒரு குழு அமெரிக்கா சென்றிருக்கிறது. அதே நேரத்தில் விராட் கோலிக்கு சில ஆவணங்கள் சேர்க்க வேண்டி இருந்த காரணத்தினால் அவர் செல்லவில்லை. அவர் மே மாதம் 30 ஆம் தேதி கிளம்புகிறார். இதே போல லண்டனில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவும் அங்கிருந்து நேராக அமெரிக்காவுக்கு பறக்கிறார். ஆனால் விராட் கோலி ஜூன் ஒன்றாம் தேதி பங்களாதேஷுக்கு எதிராக நடக்க இருக்கும் பயிற்சி போட்டியில் விளையாட முடியாது எனத் தெரிகிறது.

இந்தியாவின் நேரத்திற்கு அப்படியே நேர் எதிரான நேரம் கொண்ட நாடுகளாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் தீவுக் கூட்டங்கள் இருக்கிறது. எனவே அங்குள்ள கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவதும், மேலும் ஆடுகளத்தன்மைக்கு ஏற்ப மாறுவதும் இந்திய அணியினருக்கு மிகவும் சிக்கலான ஒரு காரியமாக இருக்கும்.

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் வாசிம் அக்ரம் கூறும் பொழுது “இந்தியா அணியினர் கொஞ்சம் முன்கூட்டியே அங்கு சென்று விட்ட காரணத்தினால் இப்பொழுது களைப்பை அவர்கள் ஒரு காரணமாக கூறவே முடியாது. இறுதியாக யோசிக்கும் பொழுது இந்தியாவுக்காக விளையாடுவதை அவர்கள் முன்னுரிமை கொடுத்து நினைக்கிறார்கள். இது இந்திய வீரர்களுக்கு ஆசிர்வாதமாக அமைகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஐயர் பற்றி ராபின் உத்தப்பா பேச்சு.. ரசிகர்கள் கடுமையான விமர்சனம்.. இதெல்லாம் சரி வருமா?

இந்திய வீரர்கள் களைப்படைவார்கள் என்று நான் கவலைப்பட்டேன். மேலும் இது குறித்து நாங்கள் விவாதமும் செய்து இருந்தோம். இந்தியாவிற்கு அமெரிக்க சூழ்நிலை கூட இருக்காது என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் தங்கள் முதல் போட்டியில் டல்லாஸ் மைதானத்தில் விளையாடுகிறார்கள். இப்போது அங்கு சென்று பயிற்சியில் ஒன்று இரண்டு போட்டிகள் விளையாடுவார்கள். சீக்கிரம் அதுக்கு ஏற்ற வகையில் மாறி கொள்வார்கள். மேலும் தற்போது பிட்னஸ் அளவு மிகவும் அதிகரித்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.