இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றி இருக்கிறது. தொடரின் ஆரம்பத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய அந்த அணி இறுதிப் போட்டியிலும் அதையே தொடர்ந்து கோப்பையை வென்றது. இந்த நிலையில் ஸ்ரேயா ஐயர் பற்றி ராபின் உத்தப்பா பேசியிருக்கும் ஒரு முக்கியமான கருத்து ரசிகர்களிடையே விமர்சனம் ஆகி வருகிறது.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கு வருவதற்கு முன்னால் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தின் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறினார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் தனக்கு காயம் இல்லை என மூன்றாவது டெஸ்டுக்கு பெயர் கொடுத்ததாகவும், ஆனால் அவரை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பாதியில் வெளியே அனுப்பப்பட்டார். அடுத்து அவர் ரஞ்சி கால் இறுதிப் போட்டியில் மும்பை அணிக்காக களம் இறங்கவில்லை. இதன் காரணமாக அவரை அதிரடியாக இந்திய கிரிக்கெட் வாரியம் சம்பள பட்டியலில் இருந்து வெளியேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பிரச்சனைகளுடன் வந்த அவரது தலைமையின் கீழ் கொல்கத்தா அணி கோப்பையை வென்று தற்பொழுது திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் பற்றி பேசி இருக்கும் ராபின் உத்தப்பா கூறும் பொழுது “நான் இங்கே இப்பொழுது இதைச் சொல்லப் போகிறேன் ஸ்ரேயாஸ் செய்ய வருங்கால இந்திய கேப்டனாக இருக்கப் போகிறார். இந்திய கேப்டன் வரிசையில் அவர் இருக்கிறார். கில்லுக்கு முன்பாக அது நடக்கலாம். ஒரு அணியை கையாளும் தகுதியும் திறமையும் அவருக்கு இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசனில் நிறைய கற்றுக் கொண்டார்.
முதுகில் காயம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை சம்பள பட்டியலில் இருந்து வெளியேற்றியது என நிறைய நடந்த போதிலும் கூட, அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்து அவர் மிகக் குறைவாகவே பேசினார். அதுவும் இப்பொழுது கடைசியில் பேசினார் அவ்வளவுதான். அவர் தான் விளையாடும் அணிக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை தெளிவாகக் காட்டுகிறார்” என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : இவங்கதான் கோலிய கோபப்படுத்தினாங்க.. அங்க இருந்து தான் எல்லாம் ஆரம்பிச்சது – தினேஷ் கார்த்திக் பேட்டி
ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஷார்ட் பந்தில் பெரிய பிரச்சனை இருக்கிறது. மேலும் அவருக்கு மணிக்கட்டு சுழல் பந்துவீச்சை சந்திப்பதிலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பிரச்சனை இருக்கிறது. இந்த காரணங்களினால்தான் அவர் கொஞ்சம் கொஞ்சமாக மூன்று வடிவ இந்திய கிரிக்கெட் அணியிலும் புறக்கணிக்கப்பட்டார். இப்படி இருக்கும் பொழுது மீண்டும் வாய்ப்பு கிடைப்பதே கடினம். இந்த நிலையில் கேப்டனாக அவர் எல்லா போட்டிக்கும் எப்படி இந்திய அணியில் நீடிக்க முடியும்? மேலும் பவுன்சர்கள் சிறப்பாக இருக்கும் வெளிநாடுகளில் எப்படி அவரால் விளையாட முடியும்? என ராபின் உத்தப்பா கருத்துக்கு ரசிகர்கள் கடுமையான விமர்சனம் செய்து வருகிறார்கள்.