கோலி பைனல் விளையாடினதுதான் சரி.. அவரை விமர்சனம் செய்ய முடியாது – மஞ்ச்ரேக்கருக்கு மிஸ்பா உல் ஹக் பதிலடி

0
1940
Virat

நடைபெற்று முடிந்த ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில் அந்த போட்டியில் விராட் கோலி அடித்த மெதுவான அரைசதம் குறித்து இந்திய முன்னாள் வீர சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருந்தார். தற்போது விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்துக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பேசியிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்கா இன்னைக்கு எதிரான இறுதிப் போட்டியில் விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தார் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 128 என்று இருந்தது. மேலும் அவர் அரை சதத்தை 48 பந்துகளில் அடித்திருந்தார். இது அவருடைய சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மெதுவான அரைசதம் ஆகும்.

- Advertisement -

இது குறித்து பேசி இருந்த இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஒருவேளை இந்தியா போட்டியில் தோற்று இருந்தால் விராட் கோலி மெதுவாக விளையாடிய விதத்திற்கு அவர் மீது கடுமையான விமர்சனங்கள் உருவாகி இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும் அந்தப் போட்டியில் விராட் கோலியை இந்திய பந்துவீச்சாளர்கள் காப்பாற்றினார்கள் என்றும் விமர்சனம் செய்திருந்தார்.

தற்போது இதுபற்றி பேசி இருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறும்போது “இதில் இன்னொரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன். 37 பந்துகளில் அவர் அரைசதம் அடித்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நாம் சொல்லலாம். அதே சமயத்தில் விராட் கோலி 37 பந்துகளில் அரை சதம் அடித்து ஆட்டம் இழந்து இருந்தால் நிலைமை வேறு மாதிரியாக சென்று இருக்க வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

எனவே இதை எடுத்து வைத்து பார்க்கும் பொழுது விராட் கோலி விளையாடிய விதத்தில் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் அதிரடியாக இருந்திருந்தால் சென்றிருக்கலாம். ஏனெனில் அந்த நேரத்தில் போட்டி இரு பக்கத்திலும் விளிம்பில் இருந்தது

இதையும் படிங்க : ஒரிஜினல் கிங் ரிச்சர்ட்ஸ்தான்.. கோலியே அதுக்கு இதைத்தான் சொன்னார் – பத்திரிக்கையாளர் வெளியிட்ட சுவாரசிய தகவல்

அவர்கள் இந்த போட்டியில் 170 ரன்கள் எடுத்தார்கள். ஆனால் ஆரம்பத்தில் அவர்கள் 190 ரன்களை நோக்கி விளையாடி இருந்தால், அவர்கள் 140 முதல் 150 ரன்களில் கூட ஆல் அவுட் ஆகி இருக்கலாம்.ஆனால் அவர்கள் அந்த நேரத்தில் இருந்த ரிஸ்கை புரிந்து விளையாடினார்கள். இதன் காரணமாகவே அவர்கள் அந்த போட்டியில் வெற்றி பெற்றார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -