ரோகித் கிடையாது.. இந்திய அணியை கட்டுப்படுத்தும் கன்ட்ரோல் ரூம் இந்த வீரர்தான் – இர்பான் பதான் பேட்டி

0
387
Irfan

ஐசிசி ஒன்பதாவது 2024 டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் கைப்பற்றியது. தற்போது இதற்கான வெற்றி கொண்டாட்டங்கள் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் கண்ட்ரோல் ரூம் என ஒரு குறிப்பிட்ட வீரரை இர்பான் பதான் கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டி யூனிட்டில் ரோகித் சர்மா தனித்துவம் கொண்ட வீரராக இருந்தார். இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்திருந்த அவர், அதை அதிரடியாக எடுத்திருந்தார். மேலும் அதிக பௌண்டரிகள் மற்றும் அதிக சிக்ஸர்கள் அடித்தவராக அவரே இருந்தார்.

- Advertisement -

மேலும் பவுலிங் யூனிட்டை எடுத்துக் கொண்டால் பும்ரா எட்டு போட்டிகளில் 15 விக்கெட்டுகள் கைப்பற்றி தொடர் நாயகன் விருதை வென்றார். இவரை மிஞ்சி அர்ஸ்தீப் சிங் எட்டு போட்டிகளில் 17 விக்கெட் கைப்பற்றி தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக வந்தார்.

ஆல்ர்வுண்டர் செயல்பாட்டை எடுத்துக் கொள்ளும் பொழுது ஹர்திக் பாண்டியாவுக்கு நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடர் தனிப்பட்ட வகையிலும் மிகப்பெரிய தொடராக அமைந்தது. இறுதிப் போட்டியில் அவர் வீழ்த்திய மூன்று விக்கெட்டுகளும் இந்திய அணியின் கைகளில் இன்று கோப்பை இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இதேபோல தொடரில் எல்லா போட்டிகளிலும் ஆல்ரவுண்டராக அக்சர் படேல் சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் பெரிய போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்படுவதன் மூலமாக இந்திய அணியின் கண்ட்ரோல் ரூமாக இன்று வரையில் விராட் கோலியை இருந்து வருகிறார் என்று தெரிவித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். விராட் கோலி முதல் 7 போட்டிகளில் இரண்டு டக் அவுட்டுகள் உட்பட 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதே சமயத்தில் இறுதிப்போட்டியில் 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : சூர்யா கேட்ச்சில் அம்பயர் செஞ்ச அந்தவொரு தப்பு இதுதான்.. தூள் தூளா எல்லாம் நொறுங்கிடுச்சு – ஏபி டிவில்லியர்ஸ் பேச்சு

இதுகுறித்து இர்பான் பதான் கூறும்பொழுது “விராட் கோலி இந்திய அணியின் கண்ட்ரோல் ரூம் போன்றவர். அவர்தான் இந்திய அணிக்கான பெரிய தொடர்கள் பெரிய போட்டிகள் மற்றும் பெரிய தருணங்களைக் கட்டுப்படுத்த கூடியவராக இருக்கிறார். அவர் மிக முக்கியமான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றியை கொண்டு வருகிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -