அடுத்த வருஷம் மும்பை இந்தியன்ஸ்ல ரோகித் இருக்க மாட்டார்.. இந்த டீமுக்கு வரனும் – வாசிம் அக்ரம் கருத்து

0
46
Rohit

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் 12 போட்டிகளில், 8 போட்டிகளில் தோல்வி அடைந்து 8 புள்ளிகள் பெற்று, புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா அடுத்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி விடுவார் என வாசிம் அக்ரம் கூறியிருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடருக்கும் முன்பாக ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இருந்து வாங்கி, அத்தோடு நிற்காமல் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் ரோகித் சர்மாவை நீக்கி, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கொண்டு வந்தது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணியின் சில வீரர்களாலும், அந்த அணியின் ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக ஒரு அணியாக சேர்ந்து அவர்கள் விளையாடுவது போல் தெரியவில்லை.

இதைவிட மிக முக்கியமாக ஹர்திக் பாண்டியாவுக்கு ஒவ்வொரு போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மைதானத்தில் தங்களுடைய எதிர்ப்பை கூச்சல் எழுப்பி தெரிவித்தார்கள். ரசிகர்களின் தொடர் எதிர்ப்பு அவரது செயல் திறனை பாதித்ததோடு மனநிலையையும் பாதித்தது.

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் அதிர்ச்சிகரமான முறையில் இருக்கிறது. சிறந்த வீரர்களை உள்ளடக்கிய இந்த அணி நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் என்று பலரால் கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் பலரால் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : தம்பி ஜெய்ஸ்வால் இதெல்லாம் தேவையில்லாத வேலைபா.. உன் பிரச்சனையே இதுதான் – முகமது சமி பேட்டி

இது குறித்து வாசிம் அக்ரம் கூறும் பொழுது ” எனக்கு ஒரு உணர்வு இருக்கிறது. ரோகித் சர்மா அடுத்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்க மாட்டார். அவரை நான் கேகேஆர் அணியில் பார்க்க விரும்புகிறேன். கம்பீர் வழிகாட்டியாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் ஆகவும், ரோகித் சர்மா அந்த அணியில் இருக்கும் பொழுது பேட்டிங் வரிசை மிகவும் பலமாக இருக்கும். இதை கற்பனை செய்து பாருங்கள். குறிப்பாக ஈடன் கார்டன் விக்கெட் ரோகித்துக்கு மிகவும் பிடித்தமானது. மேலும் அவர் எல்லா விக்கெட்டிலும் நன்றாக விளையாட கூடியவர். ஆனால் அவரை கேகேஆர் அணியில் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்” எனக் கூறியிருக்கிறார்.