போராடிய ரோகித் நமன்.. மீண்டும் சொதப்பிய ஹர்திக்.. கடைசி ஆட்டத்திலும் தோல்வி.. புள்ளி பட்டியலில் சோகம்

0
1046
Rohit

நடப்பு ஐபிஎல் தொடரின் 67-வது போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் கோல்டன் டக் ஆனார். இதற்கு அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் உடன் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியில் மிரட்டினார். சிறப்பாக விளையாடிய அவர் 29 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்களுடன் 75 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 44 பந்துகளில் 109 ரன்கள் குவித்தது. கேஎல் ராகுல் 41 பந்தில் 55 ரன்கள், கடைசியில் ஆயுஸ் பதோனி ஆட்டம் இழக்காமல் 10 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்கள். லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் நுவன் துஷாரா மற்றும் பியூஸ் சாவ்லா தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் டிவால்ட் பிரிவியஸ் இருவரும் வந்தார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 52 பந்துகளில் 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. டிவால்ட் பிரிவியஸ் 20 பந்தில் 23, சூரியகுமார் யாதவ் ரன் ஏதும் இல்லாமல் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 38 பந்துகளில் 10 பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்களுடன் 68 ரன்கள் எடுத்து வெளியேறினார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 13 பந்தில் 16 ரன் எடுத்தார். இதற்கு அடுத்து அசத்தலாக கடைசியில் விளையாடிய நமன் திர் ஆட்டமிழக்காமல் 28 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் ஏழாவது வெற்றி பெற்றது.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்து எங்க சிஎஸ்கே-க்கு வரீங்களா?.. கூப்பிட்ட ருதுராஜ்.. சூப்பர் பதில் சொன்ன தினேஷ் கார்த்திக்

மேலும் 14 போட்டிகளில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் பின்தங்கியது. 2022 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடருக்குப் பிறகு, அந்த அணிக்கு மிக மோசமான ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திருக்கிறது.