தம்பி ஜெய்ஸ்வால் இதெல்லாம் தேவையில்லாத வேலைபா.. உன் பிரச்சனையே இதுதான் – முகமது சமி பேட்டி

0
295
Shami

கடந்த வாரத்தில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் துவக்க வீரராக ஜெய்ஸ்வால் பெயர் இடம் பெற்று இருந்தது. ஆனால் அவர் ஐபிஎல் தொடரில் ஒரே முறையில் ஆட்டம் இழப்பது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இதுகுறித்து முகமது சமி தன் கருத்தை கூறியிருக்கிறார்.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 700க்கும் மேற்பட்ட ரன்கள் குறித்து, இரண்டு இரட்டை சதங்கள் உடன் தொடர் நாயகன் விருதையும் வென்று ஜெய்ஸ்வால் அசத்தி இருந்தார்.

- Advertisement -

எனவே டி20 உலகக்கோப்பை தொடரில் இவரது பெயர் கட்டாயம் இடம்பெறும் என எல்லோரும் நினைத்திருந்தார்கள். இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக டி20 கிரிக்கெட் மாறுவது அவருக்கு கடினமாக இருந்தது. அவருடைய ஷாட் தேர்வுகள் மிகவும் சுமாராக இருந்தது. ஐபிஎல் தொடரின் முதல் பாதி இவருக்கு மோசமாக அமைந்த காரணத்தினால், இவர் டி20 உலகக்கோப்பை இந்திய அணிகள் தேர்வு செய்யப்படுவாரா? என சந்தேகப்படும் அளவுக்கு நிலைமைகள் மாறியது.

பிறகு மீண்டு வந்து சதம் அடித்து தன்னுடைய ஃபார்ம்மை கண்டுபிடித்தார். மேலும் அவருடைய பெயர் டி20 உலகக் கோப்பை இந்திய அணியிலும் இடம் பிடித்தது. மீண்டும் இவர் தொடர்ந்து ஸ்டார்ட் பந்துகளை தவறான முறையில் அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதன் காரணமாக நேற்று முதல் பந்தில் பவுண்டரி எடுத்து இரண்டாவது பந்தில் ஆட்டம் இழந்தார்.

இதுகுறித்து இந்திய வீரர் முகமது சமி கூறும் பொழுது “மீண்டும் ஒருமுறை ஜெய்ஸ்வால் அவசரமாக இருப்பது போல் தெரிந்தது. முதல் பந்தை பவுண்டரிக்கு அடித்த அவர் இரண்டாவது பந்தில் அவுட் ஆனார். மேலும் அவசரப்பட்டு தேவையே இல்லாமல் அந்த ஷார்ட் அடித்து தன்னுடைய விக்கெட்டை அவர் பறிகொடுத்தார். அவர் சில காரணங்களால் பார்ப்பதற்கு மிகவும் அவசரமாக இருப்பது போல் தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் கோலி யாருமே கிடையாது.. எனக்கு பிடிச்ச இந்திய வீரர் இப்ப இவர்தான் – பாட் கம்மின்ஸ் விருப்பம்

ஆனால் ஜெய்ஸ்வாலுக்கு இது தேவை கிடையாது. அவர் நல்ல டச்சில் இருக்கிறார் மேலும் சதமும் அடித்து இருக்கிறார். ஆனால் அவர் டெல்லி அணிக்கு எதிராக தேவையில்லாத ஷாட்டுக்கு சென்று, தன்னுடைய ஷேப்பை இழந்து விக்கெட்டையும் இழந்தார்” என்று கூறியிருக்கிறார்.