அடுத்து எங்க சிஎஸ்கே-க்கு வரீங்களா?.. கூப்பிட்ட ருதுராஜ்.. சூப்பர் பதில் சொன்ன தினேஷ் கார்த்திக்

0
8129
Ruturaj

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நாளை முக்கிய போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. எனவே இரு அணிகளும் பயிற்சிக்கு அந்த மைதானத்தில் முகாம் அமைத்திருக்கின்றன. இந்த நிலையில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் ஆர்சிபி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இடையே சமூக வலைதளத்தில் சுவாரசியமான உரையாடல் நடந்தது.

நாளை நடைபெறும் போட்டி தினேஷ் கார்த்திக் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும். அவர் நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் இது மிகவும் உணர்வு பூர்வமான ஒரு சம்பவமாக அமைகிறது.

- Advertisement -

தோனியின் காலத்தில் விக்கெட் கீப்பராக இருந்த காரணத்தினால் பெரிய அளவில் உருவாக முடியாதவராக தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட்டில் இருக்கிறார். இதில் இன்னொரு சோகமான விஷயம் தோனி சென்னை அணிக்கு விளையாடிய காரணத்தினால், தன் சொந்த மாநில ஐபிஎல் அணிக்கு விளையாட முடியாத நிலைமையும் உருவானது.

கடந்த மெகா ஏலத்தில் தினேஷ் கார்த்திக்கை வாங்குவதற்கு சிஎஸ்கே அணி முயற்சி செய்தது. ஆனால் ஏலத் தொகை அதிகமான காரணத்தினால் அவரை வாங்க முடியவில்லை. எனவே சிஎஸ்கே அணிக்காக ஒரு முறை விளையாடி விடலாம் என்று அவர் நினைத்திருந்தது நிறைவேறவே இல்லை.

இந்த நிலையில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் சமூக வலைதளத்தில் தினேஷ் கார்த்திக்கை டேக் செய்து “அடுத்து எந்த ஐபிஎல் அணிக்கு செல்கிறீர்கள்? சிஎஸ்கேவா? என்று நகைச்சுவையாக கேட்க, அதற்கு தினேஷ் கார்த்திக் நகைச்சுவையாக “அணியில் என்னுடைய ரோல் என்னவென்று சொல்லுங்கள் கேப்டன்” என்று கூறியிருக்கிறார். தற்பொழுது ரசிகர்களால் இந்த சம்பவம் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ருதுராஜ் ஜடேஜாவுக்கு என்ன ஆச்சுனு பார்த்திங்க இல்ல.. தோனி எதுவும் செய்ய மாட்டார் – இர்பான் பதான் அறிவுரை

தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு ஆரம்பித்து, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் லயன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என மொத்தம் ஆறு அணிகளுக்கு விளையாடி இருக்கிறார். கடைசியாக அவர் ஆசைப்பட்ட சிஎஸ்கே அணிக்கு விளையாட முடியாமலே அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.