எங்க தப்பு நடந்துச்சுன்னு பாக்குறதுக்குள்ள.. முழு ஐபிஎல் முடிஞ்சிடுச்சு.. மோசமான சீசன் – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
162
Hardik

இன்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது சொந்த மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளுக்கும் இதுவே கடைசி போட்டியாக இருந்தது. இந்த போட்டியில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பிரதீப் பாண்டியா பேசியிருக்கிறார்.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியில் தங்களது முன்னணி வீரரான பும்ராவுக்கு ஓய்வு கொடுத்தது. மேலும் காயத்தால் திலக் வர்மா விளையாடவில்லை. இதன் காரணமாக டிவால்ட் பிரிவியஸ் மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் இருவருக்கும் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது

- Advertisement -

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. லக்னோ அணிக்கு நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 29 பந்தில் 75 ரன்கள் எடுத்தார். இன்னொரு முனையில் பொறுமை காட்டி விளையாடிய கேப்டன் கே.எல்.ராகுல் 41 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. பியூஸ் சாவ்லா, நுவன் துஷாரா தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடிய 38 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதற்கு அடுத்து கடைசியில் நமன் திர் ஆட்டம் இழக்காமல் அதிரடியாக விளையாடி 28 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். ஆனாலும் மும்பை ஆறு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 196 ரன்கள் மட்டுமே எடுக்க, லக்னோ 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் மும்பை இந்தியன்ஸ் புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

தோல்விக்கு பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “இது மிகவும் கடினமாக இருக்கிறது. நாங்கள் நல்ல தரமான கிரிக்கெட் விளையாடாததால், இந்த ஐபிஎல் சீசன் முழுவதையும் இழக்க நேரிட்டு இருக்கிறது. இது ஒரு தொழில் முறை உலகம். இங்கு நாம் எப்பொழுதும் நம் கால்களை சிறந்த முறையில் வைக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : போராடிய ரோகித் நமன்.. மீண்டும் சொதப்பிய ஹர்திக்.. கடைசி ஆட்டத்திலும் தோல்வி.. புள்ளி பட்டியலில் சோகம்

இங்கு நல்ல நாட்களும் இருக்கும் கெட்ட நாட்களும் இருக்கும். ஆனால் நாங்கள் ஒரு அணியாக நல்ல ஸ்மார்ட் கிரிக்கெட் விளையாட வில்லை.என்ன தவறு நடந்தது என்று சுட்டிக் காட்டுவதற்கு முன்னால் முழு சீசனும் எங்களுக்கு தவறாக போய்விட்டது. இன்று தோற்ற போட்டியையும் அதில் சேர்த்து விடலாம்” என்று கூறியிருக்கிறார்