நடப்பு சாம்பியன் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி இரண்டு தொடர் தோல்விகளை அடைந்து தொடரை விட்டு வெளியேறி இருப்பது குறித்து, வாசிம் அக்ரம் அணியை மாற்றி அமைப்பது தொடர்பாக விமர்சனம் செய்திருக்கிறார்.
பாகிஸ்தான் அணி நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துகிறது. இந்த நிலையில் தங்களுடைய பிரிவில் இடம் பெற்று இருந்தால் பெரிய அணிகளான நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளிடம் தோல்வி அடைந்து, தொடர் ஆரம்பித்த ஆறே நாட்களில் தொடரை விட்டு வெளியேறி சொந்த நாட்டு ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கோபப்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து வாசிம் அக்ரம் பேசும் பொழுது “தற்போது பாகிஸ்தான் அணியில் கடுமையான நடவடிக்கைகள் தேவை. நாங்கள் பல ஆண்டுகளாக பழமையான கிரிக்கெட்டை விளையாடி கொண்டு வருகிறோம். இந்த நிலை மாற வேண்டும். அச்சமற்ற கிரிக்கெட் விளையாட இளம் வீரர்கள் அணிக்குள் கொண்டுவரப்பட வேண்டும். நீங்கள் ஐந்து முதல் ஆறு மாற்றங்களை அணியில் செய்ய வேண்டும் என்றால் யோசிக்காமல் அதை செய்யுங்கள்”
“இவ்வளவு அதிகமான மாற்றத்தை ஒரே நேரத்தில் செய்கின்ற காரணத்தினால் அடுத்த ஆறு மாதங்கள் தொடர்ந்து பாகிஸ்தான் அணி தோல்வி அடையும் என்றால் அது பரவாயில்லை. ஆனால் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு தைரியமான முறையில் விளையாடும் அணியை இப்போதே நாம் உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது”
“நீங்கள் இதுவரை செய்த எல்லாமே போதும் முடியவில்லை. நீங்கள் கொண்டு வந்த எல்லாரையுமே நட்சத்திரங்கள் ஆக்கி விட்டீர்கள். கடந்த ஐந்து ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் 60 ரன் சராசரியில் 24 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள். அதாவது இவர்கள் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன் கொடுத்திருக்கிறார்கள். இந்த வகையில் விளையாடும் 14 அணிகளில் மோசமான பந்துவீச்சு சராசரியில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இது அமெரிக்கா மற்றும் ஒமானை விட மோசமானது”
இதையும் படிங்க : இங்கிலாந்து நட்சத்திர வீரர் ரூல்ட் அவுட்.. மாற்று வீரர் அறிவிப்பு.. அவரும் ஆட முடியாத வினோத சோகம்
“பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் அவர்களே நீங்கள் பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவர் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரை அழைத்து என்ன மாதிரி அணியை தேர்வு செய்திருக்கிறீர்கள்? என்று கேளுங்கள். குல்திஸ் ஷா மற்றும் சல்மான் அலி இருவரும் எப்போதாவது விக்கெட் எடுப்பது போல தெரிந்தார்களா? இந்த அணி நன்றாக இல்லை என நான் பல வாரங்களாக கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால் யாருமே கேட்ட மாதிரி இல்லை. தயவுசெய்து அணியில் பெரிய மாற்றங்களை செய்ய தயாராகுங்கள்” என்று கூறி இருக்கிறார்.