இங்கிலாந்து நட்சத்திர வீரர் ரூல்ட் அவுட்.. மாற்று வீரர் அறிவிப்பு.. அவரும் ஆட முடியாத வினோத சோகம்

0
36
England

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி எதிர்ப்பாராத தோல்வி அடைந்த நிலையில் அந்த அணியின் முக்கிய வீரர் ஒருவர் காயத்தின் காரணமாக தொடரை விட்டு வெளியேறி இருப்பது மீண்டும் பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.

இந்தியாவில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் நம்பிக்கை இளம் நட்சத்திரம் ஜேக்கப் பெத்தேல் காயம் காரணமாக வெளியேறி இருந்தார். தற்போது இங்கிலாந்து பவுலிங் யூனிட் பலவீனமாக காணப்படும் நிலையில் மேலும் ஒரு முக்கிய வீரர் வெளியேறியிருக்கிறார்.

- Advertisement -

பெரிய ரன்கள் எடுத்தும் தோல்வி

தற்போது நடைபெற்றுக் கொண்டு வரும் சாம்பியன் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 351 ரன்கள் இங்கிலாந்து அணி குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் பெரிய சதம் அடித்து அணிக்கு சிறந்த ஸ்கோர் கொண்டு வர உதவினார். அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி ஆறு நட்சத்திர வீரர்கள் இல்லாமல் தொடருக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான நிலையில் ஸ்கோர் போர்டில் பெரிய ரன்கள் இருந்தும் கூட, ஆஸ்திரேலியா அணிகள் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இருந்தும் கூட, இங்கிலாந்து பவுலிங் யூனிட்டால் அனுபவமற்ற ஆஸ்திரேலியா அணியை கட்டுப்படுத்த முடியவில்லை. மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரி மற்றும் ஜோஸ் இங்லீஷ் சிறப்பாக விளையாட ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி இருக்கிறது.

- Advertisement -

வெளியேறிய முக்கிய வீரர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் பிரைடன் கார்ஸ் வெறும் ஏழு ஓவர்கள் பந்துவீசி 69 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இந்த நிலையில் அந்த போட்டியில் கால் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரை விட்டு முழுவதுமாக வெளியேறி இருக்கிறார்.

இதையும் படிங்க : என்னையும் தாண்டிட்டார் இந்த இந்திய வீரர்.. இவர மாதிரி ஒருத்தரை நான் பார்த்ததில்ல – ரிக்கி பாண்டிங் பாராட்டு

இந்த நிலையில் அவருடைய இடத்திற்கு இளம் சுழல் பந்துவீச்சாளர் ரேகான் அகமத் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் நாளை பிப்ரவரி 26 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கடாபி மைதானத்தில் இங்கிலாந்து அணி விளையாட இருக்கும் போட்டிக்கு ரேகான் அகமத் கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது. சரியான மாற்று வீரராக இருந்த போதிலும் கூட, முக்கியமான போட்டியில் களம் இறங்க முடியாத சூழ்நிலை இருப்பது இங்கிலாந்து அணிக்கு வினோதமான சோகத்தை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -