15 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் அறிவையும் ஆட்டத்தை கணிக்கும் திறனையும் ஈஸ்ட் ஜோன் கேப்டன் இஷான் கிஷன் வெகுவாக பாராட்டி பேசியிருக்கிறார்.
துலீப் டிராபி இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடந்த மீட்டிங்கில் ஈஸ்ட் ஜோன் அணி முழு பலத்துடன் களம் இறங்கும் என்று உறுதி செய்யப்பட்டது. இதில் வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் அடித்து 57 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும் செமி பைனல் போட்டியில் சேஸிங் செய்யும் போது இவரது அதிரடி ஆட்டம் அணிக்கு ஒரு நல்ல ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தது.
இதுகுறித்து இஷான் கிஷன் பேசும்போது “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் 15 வயதான பாய் வைபவ் மிகவும் ஸ்மார்ட் ஆக இருக்கிறார் என நான் நினைக்கிறேன். அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று சரியாகத் தெரிகிறது, மற்ற பிளேயர்ஸ் உடன் அவர் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன், அவர் செய்வதெல்லாம் சரியாகவே இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “முன்பு அவர் 3 நாள் அல்லது 4 நாள் கிரிக்கெட் விளையாடி இருந்தாலும் இது 5 நாள் கேம் என்பதால் எந்த டவுட்டும் தேவையில்லை. நாளின் முடிவில் அவரிடம் இருந்து ரன்ஸ் வர வேண்டும், அதை செய்யவே அவர் விரும்புகிறார். அவர் டீம்மேட்ஸ்-க்கு ஹெல்ப் பண்ணி ரன்ஸ் எடுப்பது தான் இம்பார்ட்டன்ட், இதுவரை அவர் கிரேட் ஜாப் செய்துள்ளார்” என்று கூறி இருக்கிறார்.