இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் முன்னாள் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா இருவருக்கும் இடையே இருந்த ஆழமான பிணைப்பு குறித்து ஒரு உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.
தோனி 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனது இன்டர்நேஷனல் ரிட்டயர்மென்ட் அறிவித்த சில நிமிடங்களிலேயே, சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்து அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி அளித்தார்.
இந்திய டீமில் தனது ஆரம்ப காலத்தில் தோனி தனக்கு அளித்த சப்போர்ட் மற்றும் கைடன்ஸ் குறித்தும், அவருக்காக விளையாட நினைத்தது பற்றியும் ரெய்னா ஒரு இன்டர்வியூவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா பேசும்போது “நான் முதலில் இந்திய டீமிற்காக அல்ல தோனிக்காகவே சிறப்பாக விளையாட நினைத்தேன். இந்திய டீமுக்கு நான் வந்தபோது, தோனி தன்னுடைய இடத்தை எனக்காக விட்டுக் கொடுத்து ‘நீ டாப் ஆர்டரில் விளையாடு, நான் உனக்கு துணையாக இருப்பேன்’ என்று கூறினார்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “ஒரு கேப்டன் உங்களுக்காகத் தனது இடத்தை தியாகம் செய்யும்போது, நீங்கள் அவருக்காகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைப்பீர்கள் தானே, அதனால்தான் நான் அவருக்காக ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று கூறி இருக்கிறார்.