பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நிலவும் குழப்பமான சூழல் மற்றும் தொடர் தோல்விகள் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் தனது வருத்தத்தையும் கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, அவர்களின் ஹெட் கோச், பௌலிங் கோச் நீக்கப்பட்டு, பல பிளேயர்ஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் நாட்டில் திறமையான கிரிக்கெட் பிளேயர்ஸ்க்கு பஞ்சமில்லை என்றாலும், அந்நாட்டின் கிரிக்கெட் சிஸ்டம் மற்றும் அதில் நிலவும் தொடர் பிரஷர் காரணமாக வீரர்களால் சிறப்பாக செயல்பட முடியாமல் போவதாக ஹெய்டன் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேத்யூ ஹெய்டன் பேசும்போது “பாகிஸ்தான் டீமுடன் வொர்க் பண்ணிய காலத்தை நான் மிகவும் என்ஜாய் செய்தேன். ஆனால் அங்கு எதுவுமே சேஞ்ச் ஆகவில்லை, அதுதான் எப்போதும் பிரச்சனையாக இருக்கிறது. கிரிக்கெட் ஃபீல்டிற்கு வெளியே நடக்கும் பிரச்சனைகளும், அந்த என்விரான்மென்ட்டும் பிளேயர்ஸ் கன்சிஸ்டன்ட் ஆக பெர்ஃபார்ம் செய்ய விடுவதில்லை” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “பாகிஸ்தான் டீமில் நேச்சுரல் டேலன்ட் அதிகமாக இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு சரியான ஃபோகஸ் மற்றும் ஃபிரீடம் கிடைப்பதே இல்லை, எப்போதும் ஒரு கேயாஸ் சூழலிலேயே இருக்கிறார்கள். அவர்கள் எந்தவித பிரஷரும் இல்லாமல் நம்பிக்கையோடு ஃப்ரீயாக விளையாட அனுமதிக்கப்பட்டால், உலகத்தில் இருக்கும் எந்த டீமையும் எளிதாக வீழ்த்தி விடுவார்கள்” என்று கூறி இருக்கிறார்.